” தி அ மலை கார்த்திகை தீபம் – சன்மார்க்க விளக்கம் “

” தி அ மலை  கார்த்திகை  தீபம் – சன்மார்க்க விளக்கம் ”

கார்த்திகை நட்சத்திரத்தின் போது இங்கு மலையில் உச்சியில் அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது

இதன் தாத்பரியம் யாதெனில் ??

அண்ணாமலை = பிரணவ மலை – சுழுமுனை உச்சி
நம் சிரசிலும் அகத்தில் உள்ளது

சுழுமுனை நாடியின் உச்சியில் ஆன்மா ஜோதி பிரகாசிப்பதையே ( கோடி சூரியப்பிரகாஸ்ம் உடையது ஆன்ம ஜோதி ) , புறத்திலே மலையின் உச்சியில் ” மகா தீபம் ” ஏற்றிக்காண்பித்திருக்கிறார் நம் முன்னோர்

ஆகையால் நாம் புறத்திலே மட்டும் இந்த தீப தரிசனம் செய்துவிட்டு, அகத்திலே செய்யாமல் இருப்பது நம் செயல் அல்ல, அழகல்ல் – அகத்திலும் காண்பதே அவன் கடமையாகும்

இதை நிரூபிக்கும் வகையில் கோவில்களில் – ” துவஜஸ்தம்பத்தின் உச்சியில் மகா தீபம் ” ஏற்றுவர் –
துவஜஸ்தம்பம் = சுழுமுனை நாடி
உச்சி = 36 தத்துவங்கள் கடையாம் நாதத்தின் மேல் – ஆன்மா உள்ளது , அதனால் தீபம் அங்கு ஏற்றப்படுடிகிறது

ஆன்மா நாத விந்து கலவை ஆகையால் , இன்னாளிலே இதன் கலவையை சொல்லும் பொரி உருண்டை
இறைக்கு நைவேத்தியம் படைத்து உண்பர்

பொரி உருண்டை = வெண்மை + செம்மை
வெண்மை = விந்து
செம்மை = நாதம்

இந்த ரெண்டும் சேர்ந்ததே ஆன்மா

இந்த தத்துவ வெளிப்பாடெல்லாம் சொல்லியாயிற்று – ஆனால் யார்க்கு உண்மை தெரிந்து வைத்து உள்ளனர் என்பது தான் கேள்வி ??
எல்லாரும் புற சடங்கையே செய்கிறார் – அகத்தை கோட்டை விட்டார் பெரும்பாலோர்

” அகத்தை பிடித்தால் தான் நாம் உருப்படுவோம் ” – இல்லையெனில் அது வரையில் பிறப்பிறப்பு தான்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s