” புண்ணாக்கீசர் ” – பெயர் விளக்கம்

” புண்ணாக்கீசர் ” – பெயர் விளக்கம் இவர் சித்தர் இவர்க்கு இந்தப்பெயர் வரக் காரணம் யாதெனில் : இவர் தன் நாக்கின் அடியை அறுத்து , அதன் நீளத்தை அதிகமாக்கி, அதை உள்ளே மடித்து,மேலேற்றி , வைத்தால் , மூக்கினுள் செல்லும் சுவாசம் , அதை தடுத்து நிறுத்தப்பட்டு , சுவாசத்தை நுரையீரலுக்கு வரவிடாமல் மேலேற்றும் இம்மாதிரி செய்து நாக்கை புண்ணாக்கிக்கொண்டதால் ‘ இவர் புண்ணாக்கீசர்” ஆனார் இதனால் நெற்றிக்கண் திறப்புக்கு வழி கிடைக்கும் என…

என் சாதனம் திங்கள் – சனி வரை

என் சாதனம் திங்கள் – சனி வரை திங்கள், ஞாயிறு பயிற்சி செய்யாததால் , மனம் கொஞ்சம் ஒத்துழைக்க மறுக்கும் – உடல் சூடு குறைந்துள்ளதால் , 3 மணி நேரம் செய்ய ஒத்துழைக்காது எப்படியோ   2 மணி நேரம்  செய்துவிடுவேன் பின் செவ்வாய் – வெள்ளி ஒரு பிரச்னையில்லாமல் 3 மணி நேரம் செய்துவிடுவேன் சனி – மனம் உடல் நாளை ஞாயிறு விடுமுறை நினைத்து அதன் மகிழ்ச்சியில் இன்று சற்றுக்குறைத்துக்கொண்டாலென்ன ?? எனக் கேட்கும் ஆனாலும்…

தமிழ் ஒரு ” பண்ணி” மொழி ஆகிவிட்டது ???

தமிழ் ஒரு ” பண்ணி” மொழி ஆகிவிட்டது ??? அதாவது தமிழை ஆங்கிலம் கலந்து பேசிப் பேசி , அது ஒரு ” பண்ணி” மொழி ஆகிவிட்டது என்றால் அது பொய்யல்ல பாருங்கள் கட் பண்ணி வெய்ட் பண்ணி டிலீட் பண்ணி போஸ்ட் பண்ணி பாஸ் பண்ணி ஷேர் பண்ணி எல்லாம் ” பண்ணி “தான் – தமிழ் சுத்தமாக பேசத் தெரிவதில்லை மக்களுக்கு தமிழ் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது என்பது உண்மையாகி  வருது – பாரதியின்…

என் அனுபவங்கள் – ” விஷனில் பொன்னம்பலம்”

என் அனுபவங்கள் – ” விஷனில் பொன்னம்பலம்” உண்மைச் சம்பவம் – கோவை – 2016 சென்ற வருடம் இது வந்தது தியானம் செய்து கொண்டிருந்த போது , ஒரு விஷன் – என் வீட்டின் கதவின் அருகில் வந்து ஒருவர் நிற்கிறார் – முகம் தெரியவில்லை – அவர் பேசினார் – ” நான் பொன்னம்பலம் வந்திருக்கிறேன் ” என்கிறார் எனக்குப்புரியவிலை என் சன்மார்க்க நண்பர் – வயது 70+ காஞ்சியில் உள்ளார் – அவர்க்குத்…

இயற்கையின் வினோத படைப்பு ????

இயற்கையின் வினோத படைப்பு ??? மனிதரில் பெண் அழகு அவள் சந்திரன் அம்சம் ஆண் அறிவு மயம் அவன் சூரியன் அம்சம் விலங்கில் ஆண் விலங்குகள் அழகு ஆண் யானை தந்தத்தால் அழகு ஆண் சிங்கம் பிடரியால் அழகு ஆண் மயில் தன் தோகை விரித்தால் அழகு இதென்ன இயற்கையின் விந்தை ?? இதென்ன வினோதம்?? யாரே அறிவார் இதன் விடையை ?? வெங்கடேஷ்

அருட்பெருஞ்சோதியும் காதலும் ( உண்மைக் காதல் )

அருட்பெருஞ்சோதியும் காதலும் ( உண்மைக் காதல் ) ஒரு காதலன் தன் காதலியின் மீதுள்ள மோகத்தினால் , அவளின் நினைவாகவே இருப்பதால் , அவன் யாரை நோக்கினாலும் அவள் முகம் மட்டும் தான் தெரிகிறது – மற்றவர்களின் முகத்தில் கூட அவள் முகம் தான் தெரிகிறது இது நிதர்சன உண்மை அது போல் , ஒரு சாதகனும் தன் சித்தம் யாவையும் சுத்த சிவமாக நிரப்பி வழித்தால் , அப்போது அவனுக்கு எல்லாம் சிவமயமாக நிற்கும் –…

அருட்பெருஞ்சோதியும் சாதகனும் – பாகம் 2

அருட்பெருஞ்சோதியும் சாதகனும் – பாகம் 2 1 ஒரு சாதகன் தனக்கு எந்த தேவையில்லை எனும் நிலைக்கு வந்த பின் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அவனுக்கு எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து வைப்பார் – தானே பூர்த்தி செய்து கொள்ளும் வல்லமை கொடுப்பார் 2 ஒரு சாதகன் தனக்கு எந்த ஆசையுமிலை எனும் நிலைக்கு வந்த பின் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அவனுக்கு எல்லா ஆசைளையும் பூர்த்தி செய்து வைப்பார் – தானே பூர்த்தி செய்து கொள்ளும் வல்லமை கொடுப்பார்…

திருமந்திரம் – எப்போது ஞானம் சித்திக்கும் ??

திருமந்திரம் – எப்போது ஞானம் சித்திக்கும் ?? முன்னை யறிவினிற் செய்த முதுதவம் பின்னை யறிவினைப் பெற்றால் அறியலாம் தன்னை யறிவதறிவாம் அஃதன்றிப் பின்னை யறிவது பேயறிவு ஆகுமே கருத்து : நாம் நம் பல முன் பிறவிகளில் செய்த தவம் , இப்பிறவியில் முதிர்ந்து வந்தால் , நம்மை அறியலாம் , ஞானம் அடையலாம் இதை தான் தொட்ட குறை – விட்ட குறை என்கிறார்கள் நம் முன்னோர் நாம் பல முன் பிறவிகளில் தவம்…

அகத்தியர் பாடல் – விளக்கம்

அகத்தியர் பாடல் – விளக்கம் உண்ணும் போது உயிர் எழுத்தை உயரே வாங்கி உறங்கின்றபோதேல்லாம் அதுவே யாகும் பெண்னின் பால் இந்திரியம் விடும் போதெல்லாம் பேணிவலம் மேல்நோக்கி அவத்தில் நில்லு திண்ணுகா யிலைமருந்து அதுவேயாகும் தினந்தோறும் இப்படியே செலுத்த வல்லார்கு யண்ணுழி காலம் மட்டும் வாழ்வார்பாரு மறலி கையில் அகப்படவும் மாட்டார் தாமே கருத்து : மூச்சுக்காற்றை கீழே செல்ல விடாமல் தடுத்து , சுழுமுனை இயக்கம் நடத்தி , அதில் செலுத்தி வர வேண்டும் எப்போதும்…

பத்ரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி

பத்ரகிரியார்  பாடல் – எக்காலக்கண்ணி அகங்கரம் உள்அடக்கி ஐம்புலனும் சுட்டறுத்து தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக் காலம் ?? கருத்து : அகங்காரம் = உடல் / மன அசைவு மனம் உடலின் அசைவுகளை ஒழித்து , ஐம்புலங்களையும் பிரணவத்தில் சேர்த்து , தான் மெய்யான தவ நிலையாகிய தூங்கா தூக்கமாகிய விழிப்பு நிலையில் இருந்து எப்போது சுகம் பெறுவேன் என வினவுகிறார் பத்ரகிரியார் மனம் அற்ற நிலை = தூங்கா தூக்கமாகிய விழிப்பு நிலை ஐம்புலனும்…