” சாதகனின் சொத்து “

” சாதகனின் சொத்து ” ஒரு தொழிலாளிக்கு உற்பத்தித் திறனும் தரமும் இரு கண்கள் அது அவனை தொழிலில் மேலேற்றும் ஒரு ஊழியனுக்கு திட்டமிடுதலும் நிறைவேற்றுதலும் இரு கண்கள் அது அவனை அவன் பணியில் மேலேற்றும் ஒரு சாதகனுக்கு அருளும் திருவடியும் இரு கண்கள் அது அவனை சாதனத்தில் தினமும் முன்னேற்றும் இது அவன் சொத்து ஆகும் வெங்கடேஷ்

” பாதுகாப்பு ” – விளக்கம்

” பாதுகாப்பு ” – விளக்கம் இறையின் பாதுகைகள் ( திருவடி ) தரும் காப்பு தான் பாதுகாப்பு ?? எல்லாம் அறிந்த ஞானிகாள் விளக்கி அருள வேண்டுவனே வெங்கடேஷ்

” சிவமும் எமனும் “

” சிவமும் எமனும் ” 1சாதனம் செய்வார் சிவனின் கையில் செய்யார் எமனின் கையில் 2 அருளால் சாதனத்தில் மேலேறுவார் சிவனின் கையில் ஒரு சாதனமும் செய்யாமல் அங்கேயே முகாமிட்டிருப்பார் எமனின் கையில் வெங்கடேஷ்

” மறக்க முடியாத விஷன் – வள்ளல் பெருமான் கொடுத்த பரிசு”

” மறக்க முடியாத விஷன் – வள்ளல் பெருமான் கொடுத்த பரிசு” உண்மைச் சம்பவம் – கோவை – 2017 ( 6 மாதம் முன் ) 2008 விஷனில் – ஒரு பரிசு எனக்கு வரவேண்டியது வராமல் போய்விட்டது பற்றி நினைத்துக்கொண்டேயிருந்த போது, வந்த விஷன் இது அந்த பரிசு என்னவாக இருக்கும் ?? ஏன் கிடைக்காமல் போனது என்று வருந்தியிருந்த போது , வள்ளல் பெருமான் வந்து , என் கையைப்பிடித்து இழுத்துச் சென்று…

” குரு பார்க்க கோடி புண்ணியம்” – சன்மார்க்க விளக்கம்

” குரு பார்க்க கோடி புண்ணியம்” – சன்மார்க்க விளக்கம் இதன் உள் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் , புற குருவை பார்த்தால் , கோடிப்புண்ணியம் என்று நினைக்கிறார்கள் மக்கள் இது உண்மையெனில், காஞ்சி மகானின் உதவியாளர் தான் உலகிலேயே மாபெரும் புண்ணியவானாக இருக்க வேண்டும் அங்கு பணி செய்யும் அனைவரும் மாபெரும் புண்ணியவான்களாக இருக்க வேண்டும் ஆனால் உண்மை நிலவரம் அப்படியிலை இது நோவாமல் நோன்பு நோற்பது மாதிரி உண்மையென்னவெனில் குரு = ஆன்ம ஒளி…

சாதனம் எப்படி செய்வது ???

சாதனம் எப்படி செய்வது ??? 1 மனம் என்னும் கோட்டிற்குப்பின்னால் ” அருள் ” என்னும் பெரிய கோடு போட்டால் , மனம் காணாமல் போகும் மனம் = மின்மினிப்பூச்சி அருள் = சூர்யன் சூரியன் முன் மின்மினிப்பூச்சி ஒன்றுமிலை 2 தற்போதம் என்னும் கோட்டிற்குப்பின்னால் ” சரணாகதி ” என்னும் பெரிய கோடு போட்டால் , தற்போதம் அடங்கிக் காணாமல் போகும் இன்னிலை வருங்கால் , மனம் என்னும் சந்தைக்கடை நிலை மாறி, மௌனம் என்னும்…