எல்லா நோய்க்கும் ஒரே மருந்து தீர்வு ??
இது ஒரு ஆய்வுக்கட்டுரை
நம் சித்தர் பெருமக்கள் நமக்கு 4448 வித நோய்கள் வரக்கூடுமென தெரிவித்துள்ளனர்
எல்லா நோய்க்கும் ஒரே மருந்து தீர்வு – இது சாத்தியமா ??
சாத்தியம் தான்
எப்படியெனில் , எப்படி எல்லாம் அறிந்த ஒன்றை நாம் அறிந்து கொண்டால் , நாம் எல்லாம் அறிந்தவன் ஆவோமோ அது போல் , எந்த ஒரு உறுப்பு , உடலின் எல்லா உறுப்புகளை கட்டுப்படுத்துகிறதோ , அந்த உறுப்பை நாம் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டால் , உடல் நம் கட்டளைக்கு அடி பணிந்து நடக்கும் – உடல் ஆரோக்கியம் ஆக இருக்கும்
அது எந்த உறுப்பு ??
அதான் மனம் என்னும் மூளை
மனதின் கட்டுப்பாட்டில் தான் உடல் தன் பணி செய்கிறது
மூளை – பீனியல் + பிட்டூயிட்டரி சுரப்பியின் உதவியினால் , எல்லா உறுப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் வேலை செய்ய – நடக்க வைக்கிறது
பிட்டூயிட்டரி சுரப்பியாகிய ஆஞ்ஞா சக்கரத்தில் தான் எல்லா உறுப்புகளும் கட்ட்ப்பட்டுள்ளன
மனம் = புற மூளை
அதனால் , மனதை நம் வஸப்படுத்திவிட்டால் , மூளை நம் வசமாகிவிடும் – அப்போது உடலும் நம் வசமாகிவிடும் – உடலின் எல்லா உறுப்புகளையும் நம் கட்டளைக்கு ஏற்ப நடத்திக்கொள்ளலாம் என்பது அர்த்தம் ஆகும்
மனதை எப்படி நம் வசப்படுத்துவது ??
சாதனம் = தவம் தான் ஒரே வழி
” இதை செய்து முடித்துவிட்டால் , நாம் என்றும் ஆரோக்கியமாக இருக்கலாம் – ஒரு நோயும் நம்மை அண்டாது ”
வெங்கடேஷ்