சிங்கா – சிங்கி – பாகம் 3

சிங்கா – சிங்கி – பாகம் 3

அருள்

1 சிங்கா : அருள் என்றால் என்ன ?

சிங்கி : அருள் என்பது நாம் சாதனையால் பெறும் வல்லமை

2 சிங்கா : அது எப்படி இருக்கும் ?

சிங்கி : அது மும்மலம் தீக்கிரையானபின் உண்டாகும் நீற்றுப்பொடி போல் வெண்ணிற ஒளியாகும்

3 சிங்கா : ஆனால் மற்றெலோரும் அதை ஒரு பொருளாக பாவனை செய்கிறாரே ?

சிங்கி : ஆம் அது ஏதோ ஒரு பொருள் போன்று , அது இறை கொடுக்க நாம் வாங்குவது போல் நினைக்கிறார்கள் – ஆனால் அது தவறு – அது நாம் சாதனையால் உண்டாக்கி கொள்ளும் ஒரு ஒளி ஆகும்

4 சிங்கா : அதன் வல்லமை யாது ?
சிங்கி : அதனால் ஆகா காரியம் உலகிலிலை – அருள் உறில் எல்லாம் ஆகும் – இது வள்ளல் வாக்கு

5 சிங்கா : இதை பெற நாம் என்ன செய்ய வேண்டும் ?

சிங்கி : நாம் சாதனையில் அசைவை – மனம் , கண் – பிராணன் – தேகம் அசைவை ஒழிக்க வேண்டும்
மும்மலம் நாசம் செய்ய வேண்டும்
இதன் ரகசியம் விந்துவில் இருக்குது

6 சிங்கா : இதன் பெருமை எங்கு விளக்கப்பட்டுள்ளது ?
சிங்கி : ” திரு ஞான சம்பந்தரின் திரு நீற்றுப்பதிகம் ” முழுமையும் அருளின் பெருமை பாட வந்த பாடல்களாகும்

7 சிங்கா : ஆனால் மக்கள் இதை அந்த பொருளில் கொள்ளவிலையே ??

சிங்கி : ஆம் உண்மை தான் – மக்கள் இதை நாம் அணியும் நெற்றி நீறாக பாவிப்பதனால் , வந்த வினை – இதை அவர்கள் அருட்கலை என உணரவிலை
அவரவர்க்கு சன்மார்க்கம் விளங்கும் காலத்து அவரவர்கள் தெளிவு அடைவார்கள்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s