சிங்கா சிங்கி – பாகம் 35
அருட்பா உரை நடை
1 சிங்கா : பேருபதேசம் பற்றி விவரம் கூறவும்
சிங்கி : இது அவர் கைபட எழுதியதன்று – அவர் தம் தொண்டர்கள் குறிப்பு
2 சிங்கா : இதில் சில விளக்கம் கூறவும்
சிங்கி : இதில் பச்சைத் திரை – இரு கூறாக இருக்கு – கீழ் – மேல் என்றும் கூறியிருக்கிறார் –
கீழ் திரை – உலக ஆசை
மேல் திரை – பர உலக ஆசை
3 சிங்கா ; இன்னமும் விளக்கவும்
சிங்கி : இதில் வள்ளல் பெருமான் என்ன கூறியிருக்கிறார் எனில் , முயற்சி இல்லாதவர்களுடைய கீழ் திரை ஆண்டவர் வந்து விலக்குவார் – அப்போது அவர்கள் புனிதர் ஆவர் – பின் முயற்சி செய்து மேலேறி , மேல் திரை விலக்க வேண்டும் என கூறிச் சென்றுள்ளார்
4 சிங்கா : இதில் என்ன சந்தேகம் ??
சிங்கி : அப்படியெனில் , தற்போது இன்னேரத்துக்கு , எந்த முயற்சியும் இல்லாத எல்லா சன்மார்க்கத்தார் கீழ் பச்சைத் திரை விலகி யிருக்க வேணும் அல்லவா ?? ஏன் நடக்கவில்லை ??
என்பது என் கேள்வி
வெறும் உணவு தானே போட்டுக்கொண்டிருக்கிறார் இவர் , எந்த சாதனமும்செய்யாமல் தானே இருக்கிறார்கள்
5 சிங்கா : இதின் இறுதி முடிவு என்ன ??
சிங்கி : இதன் செய்தி யாதெனில்
கீழ் திரை விலகினால் – அவன் ராமன் ஆவான் – புருஷோத்தமன் ஆவான் – சுத்தன் புனிதன் ஆவான்
மேல் திரை விலகினால் – அவன் ஆன்மா கண்ணன் ஆவான் – அவன் 5 இறைசெயல்களை செய்வான்
பஞ்சகிருத்தியங்களைச் செய்வான்
வெங்கடேஷ்