தெளிவு – 27

தெளிவு – 27 சகுண நிர்க்குணம் விளக்கம் ஜீவன் இரு கலைகளில் சஞ்சரித்தால் இடை பிங்களையில் சஞ்சரித்தால் சகுணமாக நிற்கும் அது உலகை மக்களை எடைபோடும் ரெண்டாக பார்ப்பதால் ஜீவன் சுழுமுனையில் நின்றால் அது நிர்க்குணமாக நிற்கும் அது எடை போடாது அது பூர்ணம் நிறை முழுமை எது சேர்த்தாலும் நிறையாது தளும்பாது எடுத்தாலும் குறையாது அது அது தான் வெங்கடேஷ்

தெளிவு – 26

தெளிவு – 26 ” வெப்பம் ” சாதகனின் தவத்தின் வெப்ப அளவு தான் அவன் சாதனையை முடிவு செயும் லட்சக்கணக்கில் இருந்தால் சுத்த தேகம் கிட்டும் கோடிக்கணக்கில் இருந்தால் பிரணவ ஞான தேகம் சித்திக்கும் வெப்பத்தில் இருக்கு எல்லா சூட்சுமமும் இதை உண்டாக்குவது ” விந்து” ” விந்துவில் இருக்கு மகா ரகசியம் ” விந்து சேமிப்பீர் – விந்து கட்டுவீர் சன்மார்க்கத்தீர் தவம் செய்வீர் வெங்கடேஷ்

Roots of certain English words

Roots of certain English words 1 ” Juggernaut ” meaning some massive , very big vehicle , something like Jumbo , derives its root from Puri Jagannaths Temple car which used to crush people during its ride 2 ” Mullika Thanneer ” derives its roots from tamil recipe Melakuththaanneer – RASAM BG Badhey Venkatesh

” நாள் இறுதியும் வார இறுதியும் “

” நாள் இறுதியும் வார இறுதியும் ” நாள் இறுதியாம் இரவில் நன்கு தூங்கி ஓய்வு எடுத்தால் தான் மறு நாள் ஓட்டம் சரியாக இருக்கும் அதே போல் வார இறுதியாம் ஞாயிறு உற்சாகம் மகிழ்ச்சி ஓய்வு மன தளர்வு என இருந்தால் தான் அடுத்த வார ஓட்டம் நன்கு அமையும் இது உலக நிதர்சனம் வெங்கடேஷ்

நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 12

நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 12 தமிழ் மொழி மிக்க பற்று கொண்டவர்கள் வடமொழியாம் சமஸ்கிருதம் தூற்றுபவர்களும் வேதங்களை தூற்றுபவர்களும் நம் ஆன்மீக நூலாம் திருவாசகத்தை ” தமிழ் வேதம் ” என அழைப்பதும் தமிழ் வடமொழியை விட உயர்வு எனும் போது அதை வடமொழியுடன் ஒப்பிடுவதும் ஏன் ஏதுக்கு அந்த ஒப்பற்ற இணையற்ற நூலை வேதத்துக்கு சமன் செய்து பார்க்க வேண்டும் ?? வெங்கடேஷ்

நகைச்சுவை – வேடிக்கை எது ?? – பாகம் 11

நகைச்சுவை – வேடிக்கை எது ?? – பாகம் 11 நம் முன்னோர்கள் கோவில் பிரகாரத்தை 11 முறை வலம் வரவும் நவக்கிரகத்தை 11 முறை வலம் வரவும் என கூறிய போது எள்ளி நகையாடியவர்கள் இப்போது தங்கள் வீட்டில் உடல் எடை குறைக்கவும் ஆரோக்கியம் காக்கவும் நடைபாதை வலம் வருவதும் விளையாட்டுத் திடல் வலம் வருவதும் முன்னதில் புண்ணியமும் ஆரோக்கியமும் கிடைத்தது வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி ” இயற்கை எடுக்கும் பாடம் மிக அற்புதமானது” அது நமக்கு வாழ்க்கைப் பாடம் மட்டும் சொல்லுக்கொடுக்காமல் , நாம் எந்த பாடத்தில் weak ஆக இருக்கோமோ , அதை பலப்படுத்த அந்த பாடத்தில் நமக்கு சிறப்பு பாடம் எடுக்கும் சிறப்பு கவனம் எடுக்கும் , உலகில் டியூஷன் போன்று இதனால் இது எடுக்கும் பாடம் நம் கல்வியைக்காட்டிலும் மேல் – ஏனெனில் அது மௌனமாக கற்றுத்தருகிறது வெங்கடேஷ்

மௌனம் எப்படி பேசும் ??

மௌனம் எப்படி பேசும் ?? மௌனம் என்றாலும் ஆன்மா பேசும் , ஆனால் மணிரத்னம் பாணியில் ஒரு வார்த்தையில் தான் 1 ஓடிப்போயிடலாமா ?? 2 பிடிச்சுருக்கு என்ற ஸ்டைலில் தான் பேசும் அதனால் அந்த பேச்சு எதைக்குறிக்க வந்தது என்பது எனக்கு விளங்கியதில்லை – அதைப்பத்தி யோசித்தால் மண்டை சிதறிவிடும் அளவுக்கு குழம்பிப்போய்விடும் அதனால் விட்டுவிடுவேன் சில நேரங்களில் தான் அதன் பேச்சின் அர்த்தம் புரியும் வெங்கடேஷ்