சிவவாக்கியர் பாடல்
சிவவாக்கியர் பாடல் நீள வீடு கட்டி நெடுங்கதவு சாத்துவீர் வாழ வேண்டும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே காலன் ஓலை வந்திடும் கைகலந்திடு நின்றிடும் ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே கருத்து : புது வீடு கட்டி வாழ நினைக்கும் போது எமன் வந்து கொண்டு போவான் நம் உயிரை – எல்லாம் நிலையில்லா வாழ்க்கை ஆனால் விஷம் உண்ட சுத்த சிவத்தின், அம்மையின் திருப்பாதம் மெய் உண்மை சத்தியம் எங்கிறார் சிவவாக்கியர் வெங்கடேஷ்