” அந்த ஒருவனும் – கோடியில் ஒருவனும் – Chosen One உம் ” – பாகம் 2

” அந்த ஒருவனும் – கோடியில் ஒருவனும் – Chosen One உம் ” – பாகம் 2

நான் எனது வலை ஜனவரி 2015ல் ஆரம்பித்த போது , எனது நண்பர்கள் இது வேண்டாத வேலை – ஏன் ?? நீ உண்டு – உன் சாதனம் உண்டு என்றிருக்க வேண்டியது தானே – இதனால் பிரச்னைகள் தான் வரும் – உன் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் – பகைமை – வெறுப்பு தான் வரும்/ வளரும் என்றனர்

நான் இல்லை – எனக்குத் தெரிந்தது – நாலு பேருக்கு தெரியப்படுத்த வேண்டியது எனது கடமை என்று ஆரம்பித்து விட்டேன்

அப்போது எனது கையில் சுமார் 120 பதிவுகள் இருந்தன

ஏன் நான் பதிவுகள் போடுகின்றேன் எனில் ??

1 ” நல்லார் ஒருவர்” உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

2 உபனிஷத் :
கோடியில் ஒருவனே ஆன்மாவைப் ” பார்த்து ” – வியந்து போகின்றான்

3 புனித பைபிள் :
ஆண்டவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனுக்கு – Chosen One க்கு உண்மைகள் புரியும் – அவனுக்கு எல்லாம் விளங்கும்

அது போல எனது பதிவுகள் – அனுபவங்கள் – எல்லாம் ” அந்த நல்லவன் ஒருவனுக்குக்காகவே – அந்த கோடியில் ஒருவனுக்குக்காகவே – அந்த Chosen One
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனுக்காகவே ” தானே தவிர – எல்லார்க்காகவும் அல்ல

அவன் எனக்கு யார் என்று தெரியாது – ஆண்டவனுக்கு மட்டும் தான் தெரியும் என்றிருந்தேன்

ஆனால் நிச்சயமாக அவன் சன்மார்க்கத்தை சார்ந்தவனாக இருக்க மாட்டான்

இப்போது அவர் யார் என யூகிக்க முடிகிறது என்னால் – ” அவர் வேறு யாருமல்ல – நம்ம திருமதி சித்ரா சிவம் , ஃப்ரான்ச் அவர்கள் தான் ”

இவர் ஒருவர் மட்டும் தான் என் எல்லா 2800 + பதிவுகள் படித்து , தன் பயிற்சியில் இருக்கும் நுணுக்கமான சந்தேகங்களை தீர்த்து கொண்டுள்ளார் – தெளிவும் பெற்றுள்ளார் – பயன் அடைந்துள்ளார்

மேலும் நங்கு சாதனம் பழகி வருகிறார் – நல்ல அனுபவத்தில் உள்ளார் – நாத அனுபவம் பெற்றுவிட்டார்

” எனவே இவர் தான் அந்த பயனாளி ஆக கருதுகிறேன் ”

வெங்கடேஷ்

4 thoughts on “” அந்த ஒருவனும் – கோடியில் ஒருவனும் – Chosen One உம் ” – பாகம் 2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s