தெளிவு – 104

தெளிவு 104 நம் குடும்ப விழாவிற்குச் சென்றால் வந்தவரைப்பற்றிக் கவலைப்படாமல் வராதவரையே முதலில் கேட்பர்  ஏன் இவர் – அவர் வரவிலை என்று ?? அது போல் நம் மனமும் நம்மிடம் இலாதவற்றை எண்ணியே வருந்தி கிடந்து சாகும் அடித்துக்கொள்ளும் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழத் தெரியாது வெங்கடேஷ்

பட்டினத்தார் பூரண மாலை 15

பட்டினத்தார் பூரண மாலை 15 1 என்னைத் திருக்கூத்தால் இப்படி நீ ஆட்டுவித்தாய், உன்னை அறியாது உடல் அழிந்தேன் பூரணமே! பொருள் : சுத்த சிவத்தின் திருனடத்தால் நான் ஆட்டப்படிகிறேன் என்பதை அறியாமல் , உனையும் அறியாமல் , உடல் அழிந்து நின்றேன் சிவமே 2 நரம்பு தசை தோல் எலும்பு நாற்றத்துக்குள்ளிருந்து வரம்பறிய மாட்டாமல் மயங்கினேன் பூரணமே! பொருள் : இந்த உடல் நரம்பு சதை தோல் எலும்பு ஆல் ஆனது – இது நாற்றமெடுக்கும்…

பட்டினத்தார் பூரண மாலை 14

பட்டினத்தார் பூரண மாலை 14 1 சகத்திரத்தின் மேல் இருக்கும் சற்குருவைப் போற்றாமல் அகத்தினுடை ஆணவத்தால் அறிவழிந்தேன் பூரணமே! பொருள் : புறத்தில் இருக்கும் குருவை போற்றாமல் வணங்காமல் ஆணவத்தால் அறிவழிந்தேன் ஆன்மாவே 2 ஐந்து பொறியை அடக்கி உனைப் போற்றாமல் நைந்துருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே! பொருள் : 5 புலங்களை அடக்கி உனை வணங்காமல் போற்றாமல் , என் நெஞ்சம் நடுங்கினேன் ஆன்மாவே 5 புலங்களை வென்றால் தான் ஆன்ம தரிசனம் கிட்டும் என்பது…

திருவாசகம் – சிவபுராணம் -1

திருவாசகம் – சிவபுராணம் -1 நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க  ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 பொருள்: நமச்சிவாய வாழ்க. நாதன் திருவடி வாழ்க. கண்ணிமைக்கும் நேரமும் என் நெஞ்சம் பிரியாதவனுடைய திருவடி வாழ்க. திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கத்தின் திருவடி வாழ்க. தானே ஆகமமாகி நின்று நமக்கு அருகில்…

வாழ்க்கைக் கல்வி 36 

வாழ்க்கைக் கல்வி 36 ” குழந்தைகள் அருகே இருந்து பொறுமையாக பழகிப்பாருங்கள் நாம் முன்னர் எப்படி நடந்துகொண்டோம் என்று நன்றாக புரியும் வயதானவர்களிடம் பழகிப்பாருங்கள் – நாம் எப்படி இருக்கப்போகின்றோம் வருங்காலத்தில் என்பது முழுதாக புரியும் இதை எந்த பல்கலைக்கழகமும் சொல்லித்தராது தரவும்முடியாது வெங்கடேஷ்