மூன்று நாள் சிறப்பு ???

மூன்று நாள் சிறப்பு ??? வானில் வெண்மதி மூன்று நாள் தென்படுவதிலை வீட்டில் பெண் நிலா மூன்று நாள் விலக்கு இயேசு கிறிஸ்து மூன்று  நாளில்  உயிர்த்தெழுந்தார் விருந்தும் மருந்தும் மூன்று நாள் மூன்றில் என்ன விசேஷம் ?? மூன்று நாள் மூன்று மாதம் மூன்று – ஆண்டுகள் யோசித்தேன் எனக்குப் புலப்படவிலை விகாரமற்ற ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே ?? வெங்கடேஷ்

இருளில் இருக்கும் வெளிச்சம்

இருளில் இருக்கும் வெளிச்சம் அதெது?? ஆன்மா தான் அது அதனால் தான் கோவில் கருவறை இருளில் தான் வைக்கப்பட்டுள்ளது சிவலிங்கம் ஆன்மாவின் வெளிப்பாடு ஆம் “நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் என்கிறது வாசகம் “ ஆன்மாவும் அபெஜோதியும் இருளில் இருக்கும் ஒளி வெங்கடேஷ்

பட்டினத்தார் பூரணமாலை – 24

பட்டினத்தார் பூரணமாலை – 24 1 மனமாய்க் கனவாகி, மாய்கையாய், உள்ளிருந்து நினைவாகி நின்ற நிலை அறியேன் பூரணமே! பொருள் : மனமாய் – கனவாய் – மாயா மலமாய் – என் உள்ளிருக்கும் நினைவாய் – சுத்த சிவம் நின்ற திறம் , தன்மை நான் அறியேனே பூரணமே சிவமே 2 சத்திசிவம் இரண்டாய்த் தான் முடிவில் ஒன்றாகிச் சித்திரமாய் நின்ற திறம் அறியேன் பூரணமே பொருள் : சக்தி சிவமாய் – இரு திருவடியாய்…

” ரத்னசாமி ” பெயர் – சன்மார்க்க விளக்கம்

” ரத்னசாமி ” பெயர் – சன்மார்க்க விளக்கம் இது முருகனின் பல பெயர்களில் ஒன்று ரத்னம் – 9 வகையான ஒளி பொருந்திய கற்கள்  சாமி = ஆன்மா அதாவது ஆன்மாவானது நவரத்னங்கள் மீது அமர்ந்து இருக்கும் தெய்வம் என்று கூற வருது இந்தப்பெயர் இதுத் தான் பலவண்ண நிறமுடைய மயில் மீது  ஆன்மாவாகிய முருகன் அமர்ந்த திருக்கோலம் ஆகும் வெங்கடேஷ்

பட்டினத்தார் பூரண மாலை – 23

பட்டினத்தார் பூரண மாலை – 23 1 வித்தாய், மரமாய், விளைந்த கனியாய்ப், பூவாய்ச் சித்தாகி நின்ற திறம் அறியேன் பூரணமே! பொருள் : சுத்த சிவம் விதையாய் , மரமாய் , அதில் விளையும் – பூவாய் – கனியாய் , அறிவாகி நின்ற தன்மை திறம் நான் அறியேனே பூரணமே சிவமே 2 ஐவகையும் பெற்றுலக அண்டபகிரண்டம் எல்லாம் தெய்வமென நின்ற திறம் அறியேன் பூரணமே! பொருள் : 5 பூதங்களையும் உண்டாக்கி அதில்…

பட்டினத்தார் பூரண மாலை – 22

பட்டினத்தார் பூரண மாலை – 22 1 முதலாய் நடுவாகி, முப்பொருளாய், மூன்றுலகாய், இதமாகி நின்ற இயல் அறியேன் பூரணமே! பொருள் : ஆதிப்பொருளாய் , அதன் னடுவாய், முப்பொருள் ஆகிய பதி பசு பாசமாய், மூவுலகாய் – பூ , புவர் , சுவர்க்க லோகமாய் சுத்த சிவம் னின்ற தன்மை நான் அறியேனே சிவமே 2 ஊனாய் உடல் உயிராய், உள் நிறைந்த கண்ணொளியாய்த் தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே! பொருள் :…

திருவாசகம் – சிவபுராணம் – 5

திருவாசகம் – சிவபுராணம் – 5 கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,  எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர் பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் பொருள்: நெற்றியிலே ஒரு கண்ணுடைய பெருமான் தன்னுடைய கருணைக்கண் காட்டியதால் இங்கு வந்தேன். சிந்தனைக்கு எட்டாத பேரழகு மிக்க கழல்பூண்ட திருவடிகளை தொழுது நின்று, வானம்,…

ஞானரத்தினகுறவஞ்சி – பீர் முகமது பாடல்

ஞானரத்தினகுறவஞ்சி – பீர் முகமது பாடல் 1 தன்னுள் விளங்கும் தவமென்ன சொல்லடி சிங்கி அது தன்னை மறந்து தவத்தில் இருப்பது சிங்கா பொருள் : தவம் என்றால் என்ன ?/ அது தன்னை மறந்து இருத்தல் எங்கிறார் பீர் 2 என்ன விதமாக தன்னை மறப்பது சிங்கி அது ஒன்றை பொருந்தி ஒடுங்கியிருப்பது சிங்கா பொருள் : அது எப்படி தன்னை மறப்பது எனில் ?? அது, ஒன்றிலே தன்னை ஒடுக்கியிருப்பது – பதில் 3…

திருவடிப் பெருமை – திருவடிப்புகழ்ச்சி – 5

திருவடிப் பெருமை – திருவடிப்புகழ்ச்சி – 5 அப்பர் தேவாரம் மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. கருத்து : அபெஜோதி – சுத்த சிவத்தின் திருவடி – எத்தகையதெனில் குற்றமிலா வீணை இசை போன்றதும் – மாலை நிலாவின் தண்மையும் – தென்றலின் குளுமையும் – னீர் நிலையில் விளங்கும் வண்டின் ரீங்கார ஓசையை போன்றது எங்கின்றார் அப்பர் பெருமான்…

பாட்டி வைத்யம் – யோசனை

பாட்டி வைத்யம் – யோசனை யார் வீட்டில் குடும்பச் சண்டை – கணவன் மனைவி சண்டை அதிகம் இருக்கோ , அவர்கள் கால பைரவர்க்கு – நாய்க்கு தினமும் உணவு வழங்கி வந்தால் , இருவர்க்கும் இணக்கம் வரும் – புரிதல் வரும் அன்னியோன்யம் பெருகும் – குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும் என என் பாட்டி சொன்னது நம்பிக்கையுள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கவும் வெங்கடேஷ்