நகைச்சுவையும்  வேடிக்கையும் – 38

நகைச்சுவையும்  வேடிக்கையும் – 38 உலக மக்கள் கோடையில் குளிர் பிரதேசங்களுக்கு உல்லாசப் பயணம் சென்று வெப்பத்திலிருந்து தப்பிக்கத் தெரிந்தவர்க்கு சிரசில் இருக்கும் குளிர் பிரதேசமாம் ” இமைய மலை ” சென்று உலக வாழ்வெனும் வெப்பத்திலிருந்து தப்பிக்க வழி தெரியாதது வெங்கடேஷ்

ஞானியும் சாமானியனும் – 50

ஞானியும் சாமானியனும் – 50 சாமானியன் ஒரு பிரச்னையென்று வந்தால் அதில் மூழ்கி விடுவான் எளிதில் வெளி வரத் தெரியாது அதனால் குடி போதை பெண் என திசை திரும்பி அழிந்து போகிறான் இவன் ஒவ்வொரு ஊருக்கும் சாதா பேருந்து உள் போவது போல் இருக்கும் ஞானி பிரச்னையின் விளிம்பில் னின்று கவனித்து தப்பிப்பான் அதில் மூழ்க மாட்டான் இவரோ புறவழிச்சாலையில் ஊரை கடக்கும் அதிவேக விரைவு பேருந்து ஆகும் இவரோ ஊரின் புறவட்டச் சாலை வழி…

தெளிவு – 127

தெளிவு 127 சர்க்கரையைத் தேடி எறும்பு தானே வரும் அது போல் பக்குவமான சீடனைத் தேடி தகுதியான சீடனைத் தேடி தக்க குருவும் தானே வருவார் When a student is ready  the Master arrives வெங்கடேஷ்

ஒரு சென்னை வாசியின் கோவை அனுபவங்கள்

ஒரு சென்னை வாசியின் கோவை அனுபவங்கள் என் குடும்பத்துடன் கோவை வந்த ஆண்டு 2007 சென்னையில் வறுத்தெடுக்கும் வெயிலுக்கு – இந்த ஊர் வந்தவுடன் என் குடும்பத்துக்கு அளவிலா மகிழ்ச்சி ஆனந்தம் அப்போது ஹோப்ச் காலேஜில் நிறைய மரங்கள் இருக்கும் – வாகன நெரிசலும் குறைவு தான் – இப்போது போல் அல்ல என் மனைவிக்கும் மகனுக்கும் ஒரே ஸந்தோஷம் தான் பின் இந்த ஊரில் மரியாதை மிக அதிகம் – நல்ல பழக்க வழக்கம் உள்ள…

பட்டினத்தார் பூரண மாலை 38

பட்டினத்தார் பூரண மாலை  38 1 நெஞ்சம் உருகி நினைந்து உனைத்தான் போற்றிநெடு வஞ்சகத்தைப் போக்க வகை அறியேன்; பூரணமே! பொருள் : திருவடியை நினைந்து உருகி அதைப்போற்றாமல் தான் – மனதின் கண் உள்ள இருள் குணத்தை நீக்கும் வகை துறை வழி அறியேனே சிவமே பூரணமே 2 எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்கும் நிறைந்திருந்து உள்ளம் அறியாது உருகினேன்; பூரணமே! பொருள் : எப்படி எள்ளுக்குள் எண்ணெயோ அப்படி சுத்த சிவம் எங்கும் நிறைந்து…

அருட்பா – 6ம் திருமுறை – சுத்த சிவ நிலை 19

அருட்பா – 6ம் திருமுறை – சுத்த சிவ நிலை 19 ஆரணமும் ஆகமமும் ஆங்காங் குரைக்கின்ற காரணமும் காரியமும் காட்டுவித்தான் – தாரணியில் கண்டேன் களிக்கின்றேன் கங்குல்பகல் அற்றவிடத்  துண்டேன் அமுதம் உவந்து பொருள் : வேதமும் ஆகமங்களும் உரைக்கிற காரண காரியம் காட்டியது சுத்த சிவம் – ஆன்மா இருக்கும் இடமாகிய இரவு பகல் அற்ற துவாத சாந்த பெருவெளியில் இருந்து அமுதம் உண்டு மகிழ்ந்து இருக்கின்றேன் எங்கிறார் வள்ளல் பெருமான் ஆன்மா இரவு…

திருவாசகம் – சிவபுராணம் 20

திருவாசகம் – சிவபுராணம் அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்  செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 பொருள்: அல்லல் நிறைந்த பிறவியை நீக்குவானே ! ஓ ! என்று வாயினால் உரைக்க முடியா பொருளை செம்பொருளை – சொல்லிற்கு அரிய பெருமானைக் அழைத்து, திருவடியை பணிந்து அதன் கீழிருந்து சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள் இந்த…

பட்டினத்தார் பூரண மாலை – 37

பட்டினத்தார் பூரண மாலை – 37 1 செந்தா மரைத்தாளைத் தினந்தினமும் போற்றாமல் அந்தரமாய் நின்றங்கு அலைந்தேன்நான் பூரணமே! பொருள் ; திருவடியை தினம் தினம் வணங்காமலும் போற்றாமலும் இந்த உலகில் இருந்து நான் அலைந்தே வீணாகினேன் சிவமே பூரணமே 2 நீர்மேல் குமிழிபோல் நிலையற்ற காயம் இதைத் தாரகம் என்றெண்ணி நான் தட்டழிந்தேன்; பூரணமே! பொருள் : நீர் மேல் குமிழி போல் நிலையிலா உடலிதை நித்யம் சதம் என்றே நான் அழிந்தேன் சிவமே பூரணமே…

அருட்பா – 6ம் திருமுறை – சுத்த சிவ நிலை 18

அருட்பா – 6ம் திருமுறை – சுத்த சிவ நிலை 18 நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல் வார்த்தைஅன்றி நான்உரைக்கும் வார்த்தைஅன்று நாட்டீர்நான் – ஏன்உரைப்பேன் நான்ஆர் எனக்கெனஓர் ஞானஉணர் வேதுசிவம்  ஊன்நாடி நில்லா உழி பொருள் : தான் உரைப்பதெலாம் தன் வார்த்தைகள் அல்ல – அது சிவத்தினுடையது எங்கிறார் வள்ளல் பெருமான் எனக்கென எதுவுமிலை – எல்லாம் அவனுடையது எங்கிறார் வெங்கடேஷ்