பட்டினத்தார் – ஏகம்ப மாலை 3

பட்டினத்தார் – ஏகம்ப மாலை 3 கல்லாப்பிழையுங் கருதாப்பிழையுங் கசிந்துருகி நில்லாப்பிழையும் நினையாப்பிழையும் நின்அஞ்செழுத்தைச் சொல்லாப்பிழையுந் துதியாப்பிழையுந் தொழாப்பிழையும் எல்லாப்பிழையும் பொறுத்தருள் வாய்கச்சி ஏகம்பனே. பொருள் : தான் செய்த பிழைகள் பட்டியலிட்டு தான் கல்லாததும் தான் சிவத்தை எண்ணாததும் அதை நினைந்து உருகி நில்லாப் பிழையும் உன்னை நினையா தவறும் உன் திருவைந்தெழுத்து உச்சரிக்கா தவ்றும் உன்னை போற்றா பிழையும் உன்னை வணங்காப் பிழையும் மற்றெலாப் பிழையையும் பொறுத்தருள் செய்வாய் ஏகம்பனே வெங்கடேஷ்

ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் சாமானியன் தினமும் இரவில் தூங்கி உடல் மனதுக்கு சக்தி தெம்பு  பலம் உற்சாகம் பெற்றுக்கொள்கிறான் உணவு – நீர் விட இந்த தூக்கம் தரும் சக்தி தான் முக்கியம் பிரதானம் ஞானி தன் சாதனத்தால் தூங்காமல் தூங்கி பிரபஞ்ச சக்தி பெற்று சாமானியன் அடைவதை அடைகிறான் இது மிகப் பெரிய வித்தியாசம் வெங்கடேஷ்

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 2

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 2 1 ஓயாக் கவலையினா லுள்ளுடைந்து வாடாமல் மாயாப் பிறவி மயக்கறுப்ப தெக்காலம். பொருள் : மனம் ஓயாக் கவலையினால் வருத்தம்டைந்து அதில் மூழ்காமல் இந்த மாயப்பிறவி மயக்கம் ஒழிவது எப்போது ?? 2 மாயாப் பிறவி மயக்கத்தை யூடறுத்துக் காயா புரிக்கோட்டை கைக்கொள்வ தெக்காலம். பொருள் : இந்த மாயாபுரி என்னும் இந்த உலக வாழ்வு விட்டு ஆன்மா வை எப்போது அடைவேன் ?? வெங்கடேஷ்

பத்திரக்கிரியார் – எக்காலக் கண்ணி -1

பத்திரக்கிரியார் – எக்காலக் கண்ணி -1 1 ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமற் றூங்கி சுகம் பெறுவ தெக்காலம். பொருள் : தற்போதத்தை அடக்கி , ஐம்புலனை செயல்படாமல் நிறுத்தியும் அடக்கியும் மனம் இல்லா நிலையில் – ஆன்மா விழிப்பு நிலையில் – தூங்கா தூக்கம் எனும் தவம் நான் செய்வது எப்போது ?? : 2 நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே யிருந்து தேங்காக்கருணை வெள்ளந் தேக்குவது மெக்காலம். பொருள் : இந்த தூங்கா…

என் பாட்டியை மடக்கிய போது ??

என் பாட்டியை மடக்கிய போது ?? 1 இந்திரன் மாறினாலும் இந்திராணி ஒன்று தான் இந்த கேள்விக்கு என் பாட்டியிடமிருந்து ஒரு பதிலிலை போடா – முன்திரிக்கொட்டை என்பாள் வெங்கடேஷ்

பட்டினத்தார் பூரண மாலை – 43

பட்டினத்தார் பூரண மாலை – 43 பூரண மாலை தனை புத்தியுடன் ஓதினர்க்கு தாரணியில் ஞானம் தழைப்பிப்பாய்; பூரணமே பொருள் : யார் இந்த பூரண மாலை ஓதுகின்றார்களோ அவர்க்கு இந்த உலகில் ஆன்ம ஞானம் அருள்வாய் பூரணமே சிவமே வெங்கடேஷ்

பட்டினத்தார் பூரண மாலை – 42

பட்டினத்தார் பூரண மாலை – 42 1 நானேநீ நீயே நான் நாம் இரண்டும் ஒன்றானால் தேனின் ருசியது போல் தெவிட்டாய்நீ பூரணமே! பொருள் நான் தான் நீ நீ தான் நான் ஆன்மாவாகிய நான் நீ யாகிய பரம் பரம ஆன்மாவாகிய நீ தான் னான் பரமும் நாமும் ஒன்று தான் – பேதமிலை எங்கிறார் நாம் ரெண்டு பேரும் கல்ந்து ஒன்றானால் அமுதம் போல் நீ திகட்ட மாட்டாய் பூரணமே சிவமே சிவம் எப்போதும்…

பட்டினத்தார் பூரண மாலை – 41

பட்டினத்தார் பூரண மாலை – 41 1 பாசம் உடலாய்ப் பசு அதுவும் தான்உயிராய் நேசமுடன் நீ பொருளாய் நின்றனையே, பூரணமே! பொருள் : முப்பொருள் உண்மை பற்றி பேசுகிறார் பாஸம் = இந்த உடல் ஆகவும் பசு தான் உயிர் ஆகவும் பதி தான் சிவமாகவும் நீ விளங்குகிறாய் சிவமே பூரணமே 2 ஏதில் அடியார் இரங்கி இகத்தில் வந்துன் பாதம் அதில் தாழப் பரிந்தருள்வாய் பூரணமே! பொருள் : குற்றமிலா அடியவர்க்கு இரங்கி இந்த…

அருட்பா – 6ம் திருமுறை – சுத்த சிவ நிலை – 23

அருட்பா – 6ம் திருமுறை – சுத்த சிவ நிலை – 23 சிந்தா குலந்தவிர்த்துச் சிற்றம் பலப்பெருமான் வந்தான் எனைத்தான் வலிந்தழைத்தே – ஐந்தொழிலும் நீயேசெய் என்றெனக்கே நேர்ந்தளித்தான் என்னுடைய  தாயே அனையான் தனித்து. பொருள் : திருச்சிற்றம்பலத்தே விளங்கும் தாய் போன்ற அபெஜோதி என்னை வலிந்து ஆட்கொண்டான் – மேலும் ஐந்தொழிலும் செய்க என்றான் – அருள் செய்தான் வெங்கடேஷ்