கூகிள் குருவும் ஜகத் குருவும்

கூகிள் குருவும் ஜகத் குருவும் முதலாமவர் உல்கில் எல்லவர்க்கும் குரு ஆவார் இவரை அறியாதவர் யாருமிலர் எனலாம் இவர் மொழி தேசம் ஜாதி இனம் கடந்து சேவை ஆற்றுபவர் சங்கராச்சாரியர்களான ஜகத்குருக்கள் மேல்தட்டு மக்களுக்கு மட்டும் குரு ஆவார் இவர்கள் உலகத்துக்கு குரு ஒளி அல்ல தனக்குளே ஒளி காணாதவர் எப்படி உலகத்துக்கு ஒளி குரு ஆக முடியும் ?? உலகப் பொது ஜனத்துக்கும் பெரு ஜனத்துக்கும் வழி காட்டுபவர் எவரோ ?? அவர் ஜகத்குரு ஆவார்…

தெளிவு – 128

தெளிவு  – 128 விமானத்தில் பறக்க குறைந்த சுமைக்குத் தான் அனுமதி அது போல் நாமும் பிண்டத்தில் இருந்து அண்டத்துக்கு போக தத்துவங்கள் 36 தான் சுமை அது கழன்றால் தான் மேலே பயணிக்க முடியும் தத்துவச் சுமை கழல வேண்டும் இவைகள் தான் பெரிய பாரம் 36 வரும் கழன்றால் தான் ஜீவன் மேலேறி வானத்துக்கு சென்று ஆன்மாவுடன் கலக்கும் வெங்கடேஷ்

ஞானியும் சாமானியனும்

ஞானியும் சாமானியனும் ” தலைக்கு மேல் வேலை ” என்றால் சிகை திருத்தம் – அதிக பணிச்சுமை என கொள்கிறான் சாமானியன் ஞானியோ தான் சிரத்திலே ஆற்ற வேண்டிய சாதனத்தை நினைவில் கொள்கிறான் இருவரும் எதிர் துருவங்கள் தானே?? வெங்கடேஷ்

பட்டினத்தார் – நெஞ்சொடு மகிழ்தல் 1

பட்டினத்தார் – நெஞ்சொடு மகிழ்தல் 1 1 அன்று முதல் இன்றளவும் ஆக்கையொடு சூட்சியுமாய் நின்ற நிலை அறிய நேசமுற்றாய், நெஞ்சமே! பொருள் : னினைவு னாள் தெரிந்த முதல் இன்று வரையும் உடலில் சூக்குமமாய் கலந்து நின்ற ஓர் பொருளை அறிந்து கொள்ள ஆசை கொண்டனையே நெஞ்சமே 2 அலையாத பேரின்ப ஆனந்த வெள்ளத்தில் நிலையாய் உரு இருந்து நின்றனையே; நெஞ்சமே! பொருள் : மனம் அசையா நிலையில் கிடைக்கும் பேரின்ப வெள்ளத்தில் – ஆனந்தத்தில்…

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 4

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 4 1 தந்தைதாய் மக்கள் சகோதரரும் பொய்யெனவே சிந்தைதனிற் கண்டு திருக்கறுப் தெக்காலம். பொருள் : நம் சுற்றத்தார் எல்லவரும் பொய் என அறிந்து சிந்தை தெளிவது எப்போது ?? 2 மன்னுயிரைக் கொன்று வதைத்துண்டு ழலாமல் தன்னுயிர்போலெண்ணித் தவமுடிப்ப தெக்காலம். பொருள் : பல் உயிரைக்கொன்று இந்த உலகில் வாழாமல் அவைகளை என்னுயிர் போல் பாவித்து என் சாதனம் முடிப்பதெப்போது ?? வெங்கடேஷ்

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 3

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 3 1 சேயாச் சமைந்து செவிடூமை போற்றிரிந்து பேய்போ லிருந்துன் பிரமை கொள்வ தெக்காலம். பொருள் : குழந்தை போல் இருந்து – செவிடு ஊமை போல் இந்த உலகில் ஒட்டாமல் திரிந்து உன் மேல் பித்து பிடிப்பது எக்காலம் ?? 2 பேய்போற் றிரிந்து பிணம் போற்கிடந்து பெண்ணைத் தாய்போ னினைத்துத் தவமுடிப்ப தெக்காலம். பொருள் : பேய் போல் இந்த உலகில் திரிந்து – பிணம் போல்…

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 26

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 26 சத்தியஞ்செய் கின்றேன் சகத்தீர் அறிமின்கள் சித்திஎலாம் வல்ல சிவம்ஒன்றே – நித்தியம்என் றெண்ணுமெண்ணத் தாலேநம் எண்ணமெலாம் கைகூடும்  நண்ணுமின்பத் தேன்என்று நான் பொருள் : எல்லாம் செய வல்ல தெய்வம் ஒன்றே அது நித்தியமானது ஆகிய சிவம் என்ற எண்ணத்தால் நம் எண்ணமெலாம் நிறைவேறும் – இன்பம் வந்தடையும் – இது சத்தியம் உலகீர் – நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் வெங்கடேஷ்

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 24

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 24 1 கூகா எனஅடுத்தோர் கூடி அழாதவண்ணம் சாகா வரம்எனக்கே தந்திட்டான் – ஏகாஅன் ஏகா எனமறைகள் ஏத்துஞ்சிற் றம்பலத்தான்  மாகா தலனா மகிழ்ந்து பொருள் : ஒருவன் ஏகன் என மறைகள் போற்றும் என் காதலனாக திருச்சிற்றம்பலத்தான் அமைந்ததால் – எல்லாரும் கூடி மரணத்துக்கு கூட அழாத வண்ணம் எனக்கு மரணமிலாப்பெருவாழ்வு வரம் கொடுத்தான் வெங்கடேஷ்