தெளிவு – 132

தெளிவு – 132 சித்திரகுப்தன் எப்படி எனில் நம் பாவ புண்ணியங்களை சித்ர வடிவில் சேகரித்து வைப்பதால் இவர் சித்திரகுப்தன் ஆகிறார் நம் மரணத்தின் போதும் நம் பாவ புண்ய கணக்கை சித்திரங்களாக மலரும் நினைவுகளாக காட்டுவதாலும் இவர் சித்திரகுப்தன் ஆகிறார் வெங்கடேஷ்

சிங்கா சிங்கி – 51

சிங்கா சிங்கி – 51 சிங்கா : உனக்கு லட்சுமண ரேகை நினைத்தால் என்ன தோன்றுகிறது ?? சிங்கி : அது ராமாயணத்தை தாண்டியும் போகிறது – சிங்கா : எப்படி ?? சிங்கி : எனில் – இந்த கோட்டை தாண்டக்கூடாது மாதிரி – ” உள்மைய ” அன்பர்கள் – ” Success within You ” வில் பதிவுகள் – பதில்கள் போடுவதேயிலை – உறுப்பினர்களாக இருந்தாலும் – படிப்பதோடு சரி –…

சினிமா பாடலும் ஞான பாடலும்

சினிமா பாடலும் ஞான பாடலும் ஞானப் பாக்களில் சதா இடகலை பிங்களை சுழுமுனை அமுதம் நெற்றிக்கண் அருள் திருச்சிற்றம்பலம் முத்தேக சித்தி – முத்தி – காய கல்பம் பற்றிப்பேசுகிறதோ அப்படித்தான் சினிமாப் பாடலும் சதா ஆண் பெண் கலப்பு – முதல் இரவு ஏக்கம் காதல் கனவு – எதிர்ப்பார்ப்பு கல்வி இன்பம் பெண் உடல் அங்க வர்ணனை இளமை ஏக்கங்கள் – சோகம் தான் அதில் மிதமி ஞ்சி இருக்கும் முதலாமவன் ஞானி ரெண்டாமவன்…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 51

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – 51 வேதாளம் : மனித வாழ்வை நோக்குங்கால் – என்ன நினைவுக்கு வருது ?? சரியான பதில் இலையெனில் உன் மண்டை சிதறிவிடும் ஜாக்கிரதை விக்ரம் : ” பருத்தி பட்ட பாடு பனிரெண்டு தானே ” வேதாளம் : சரியான பதில் வெங்கடேஷ்

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 12

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 12 1 செஞ்சலத்தி னாற்றிரண்ட ஜெனனமோக்ஷம் பெறவே சஞ்சலத்தை விட்டுன் சரணடைவ தெக்காலம். பொருள் : ரத்தத்தில் ஆன பிறவியில் இருந்து விடுதலை பெற – மன சஞ்சலம் தீர்ந்து உன் திருவடி சரண் அடைவது எப்போது ?? 2 கும்பிக் கிரைத்தேடிக் கொடுப்பா ரிடந்தோறும் வெம்பித் திரிகை விடுப்பதினி யெக்காலம். பொருள் : உடல் பசிக்கு இரை தேடி அலைந்து கொடுக்கும் இடந்தோறும் திரிவது ஒழிவது எப்போது ??…

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 11

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 11 1 மற்றிடத்தைத் தேடியென்றன் வாழ்நாளைப் போக்காமல் உற்றிடத்தைத் தேடி யுறங்குவது மெக்காலம். பொருள் : மற்ற இடத்தில் எலாம்  உனைத் தேடி வாழ் நாளை வீணாக்காமல் – நீ இருக்கும் இடம் – திருச்சிற்றம்பலம்  தேடி அதில் லயித்து இருப்பது எப்போது ?? 2 கஞ்சா அபினியுடன் கள்ளுண்டே வாடாமற் பஞ்சாமிர்தத்தைப் பருகுவது மெக்காலம். பொருள் : போதை வஸ்துக்கள் 5 மாபாதகம் – கஞ்சா – அபினி…

ஞானிகள் – ஒற்றுமை

ஞானிகள் – ஒற்றுமை திருவாசகம் – திருவருட்பா 1 திருவாசகம் ** தந்ததுஉன் தன்னைக் கொண்டதுஎன் தன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றதொன் றென்பால் சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந் துறையுறை சிவனே எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யான் இதற் கிலன்ஓர் கைம்மாறே.• 2 அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை –36 ** என்உடலும் என்பொருளும் என்உயிரும் தான்கொண்டான் தன்உடலும் தன்பொருளும்…

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 38

அருட்பா – 6ம் திருமறை – சுத்த சிவ நிலை – 38 இவ்வுலகில் செத்தாரை எல்லாம் எழுகஎனில் எவ்வுலகும் போற்ற எழுந்திருப்பார் – செவ்வுலகில் சிற்றம் பலத்தான் திருவருள்பெற் றார்நோக்கம்  உற்றவரை உற்றவர்கள் உற்று பொருள் : யார் செத்தாரை எழுப்புவர் எனில் ?? யார் திருச்சிற்றம்பலத்தானின் திருவருள் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் நோக்கினால் இறந்தவர்கள் , எல்லா உலகும் போற்ற எழுவர் எங்கிறார் வள்ளல் பெருமான் வெங்கடேஷ்