வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி மனிதனே நீ அழுது கொண்டே பிறக்கும் போது , உன்னைச் சுற்றி இருந்தவர்கள் ஓ எனச் சிரித்தனர் – நீ மரணிக்கும் போது நீ சிரிக்க உன்னைச் சுற்றுயுள்ளவர்கள் அழுமாறு வாழ்வாயாக வெங்கடேஷ்

காதல் கவிதை

காதல் கவிதை பிரிக்காலில் 1989 ல் பணியாற்றிய போது எழுதிய முதல் காதல் கவிதை ஒரு பூவின் மது வண்டின் எச்சில் பட்டு தான் தேனாகிறது என்னவளே உன் இதழ்களைக் கொடு தேனாக்குகிறேன் வெங்கடேஷ்

காஞ்சியின் பெருமைகள் 3

காஞ்சியின் பெருமைகள் 3 1 இந்த ஊர் பிரதான ஏகாம்பரர் லிங்கம் மணலால் ஆனது என்பதால் இது மண் ஸ்தலம் அதனால் இதுக்கு அபிஷேகம் கிடையா 2 இந்த ஊரில் தான் கடுவெளிச் சித்தர் சமாதி அடைந்திருக்கிறார் 3 முத்தீஸ்வரர் ஆலயம் – இங்கு தான் சிவத்தொண்டு புரிந்து ” திருக்குறிப்புத்தொண்டு நாயனார் முத்தி அடைந்தார் ” அதனால் இந்த கோவிலுக்கு முத்தீஸ்வரர் எனப் பெயர் 4 வழக்கறுத்தீஸ்வரர் ஆலயம் : இந்த தேவர் நம் வாழ்வில்…

தெளிவு – 135

தெளிவு – 135 காசு போட்டு பரோட்டா வாங்கி சாப்பிடுவது சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வது ரயில் பயணத்தின் போது irctc rail neer சாப்பிடுவது தண்டத்துக்கு அழுவது அது வீண் இதுக்கு நம் ஊர் தண்ணீரே மேல் வெங்கடேஷ்

எனக்குப் பிடித்த அனுமன் ஸ்துதி

எனக்குப் பிடித்த அனுமன் ஸ்துதி மனோஜவம் மாருத துல்யவேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் வாதாத்மஜம் வானரயூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி. பொருள் : மனோவேகத்தையும் காற்றிற்கு நிகரான வேகத்தையும் கொண்டவரும், இந்திரியங்களை வென்றவரும், புத்திமான்களிடையே, அறிஞர்களிடையே முதன்மையானவரும், வாயுதேவனுடைய புத்திரரும், வானரச் சேனையில் மிக முக்கியமானவரும், ஸ்ரீ ராமதூதருமான அந்த ஆஞ்சநேயரைத் தலையாலே வணங்குகிறேன்… ஸ்ரீ ராமஜெயம் வெங்கடேஷ்

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 13

பத்திரகிரியார் – எக்காலக் கண்ணி – 13 1 ஆடுகின்ற சூத்திரந்தான் அறுமளவுமே திரிந்து போடுன்றநாள்வருமுன் போற்றுவது மெக்காலம். பொருள் : இந்த உடலின் உலக ஆட்டம் தீரும் வரையில் திரிந்து , எமன் வருமுன் உன் திருவடி போற்றுவது எப்போது ?? 2 நவசூத் திரவீட்டை நானென் றலையாமல் சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவ தெக்காலம். பொருள் : 9 ஓட்டை உள்ள வீட்டை தான் என நினையாமல் , தான் ஆன்மா சுத்த சிவம் என…