மதுரை பெருமைகள் – 2
1 இந்த ஊருக்கு கூடல் நகர் என்ற பெயரும் உண்டு
இதன் பொருள் :
மூன்று சூக்கும பொருட்கள் – நாடிகள் – கலைகள் – சோமசூரியாக்கினி கலைகள் ஒன்று கூடுவதால் , இந்த நகருக்கு கூடல் நகர் என்று பெயர்
இது பெருந்துறை பவானி – காசி போல் மூன்று நதிகள் கூடும் பெருமைக்கு சமம்
2 இங்குள்ள அப்பனுக்கு ” ஆலவாய் அப்பன் ” என்று பெயரும் உண்டு
ஆலவாய் = விஷம் மூடிய சிறு துவாரம் ஆகும்
அதாவது குண்டலினி தன் விஷ முகத்தால் சுழுமுனை துவாரத்தை அடைத்துக்கொண்டிருக்கு என்று பொருள்
பின் எப்படி வேதாத்ரி கூறுவது போல் குண்டலினி முதுகுத் தண்டின் அடியில் இருக்க முடியும்??
அது நம் தலையில் நெற்றியில் உளது
3 மதுரை = தேன் – அமுதம் ஆகிய மதுரம் சுரக்கும் ஊர் மதுரை
அதாவது அமுத ஸ்தானம் ஆகும் – எனவே இது ஆன்ம ஸ்தானம் ஆகும்
4 திருவாதவூர் – இந்த ஊர் மதுரை அருகில் இருக்கு
இங்கு தான் மணிவாசகப் பெருமான் பிறந்தார்
இதன் அர்த்தம் யாதெனில் :
இங்கு – இந்த தான் நம் சாதா சுவாசம் – இறை சுவாசமாக – வாசி ஆக வாதம் ஆவதால் இந்த ஊருக்கு திருவாதவூர் என பெயர் வந்தது
வெங்கடேஷ்
தொடரும்