அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 45
இன்பவடி வந்தருதற் கிறைவர் வருகின்றார்
எல்லாஞ்செய் வல்லசித்தர் இங்குவரு கின்றார்
அன்பர்உளத் தேஇனிக்கும் அமுதர்வரு கின்றார்
அம்பலத்தே நடம்புரியும் ஐயர்வரு கின்றார்
என்புருப்பொன் உருவாக்க எண்ணிவரு கின்றார்
என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
துன்பமறத் திருச்சின்ன ஒலிஅதனை நீயும்
சுகம்பெறவே கேளடிஎன் தோழிஎனைச் சூழ்ந்தே.
பொருள் :
பர நாதம் – ஓங்காரம் கேட்டால் என்ன அற்புதம் நிகழும் என்பதை இந்த திருஅருட்பாவால் விளக்குகிறார் வள்ளல் பெருமானார்
இந்த பௌதீக உடல் – எலும்பால் ஆகிய உடல் பொன்னுடல் ஆகிவிடும் – சுவர்ண தேகம் சித்திக்கும் எங்கிறார்
இன்ப வடிவம் ஆகிவிடும் – ஞான தேகம் ஆக மாறிவிடும்
முத்தேக சித்தி கைவல்யம் ஆகும்
இந்த மாற்றத்தை எல்லாம் இயற்ற – அற்புதம் இயற்ற நாதம் ஒலிக்கிறது – அதை நீயும் கேள் என் தோழி எங்கிறார் வள்ளல்
வெங்கடேஷ்