அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 47
ஈசர்என துயிர்த்தலைவர் வருகின்றார் நீவிர்
எல்லீரும் புறத்திருமின் என்கின்றேன் நீதான்
ஏசறவே அகத்திருந்தால் என்எனக்கேட் கின்றாய்
என்கணவர் வரில்அவர்தாம் இருந்தருளும் முன்னே
ஆசைவெட்கம் அறியாது நான்அவரைத் தழுவி
அணைத்துமகிழ் வேன்அதுகண் டதிசயித்து நொடிப்பார்
கூசறியாள் இவள்என்றே பேசுவர்அங் கதனால்
கூறியதல் லதுவேறு குறித்ததிலை தோழீ
பொருள் :
என் ஆன்மாவுக்கு உயிராம் அபெஜோதியர் வருகின்றார் அதனால் என் தோழி்யர் எல்லாரும் வெளியே செல்க என நான் பகர்வது ஏனெனில்
நான் அகத்தே இருந்து – ஜோதியுடன் கலந்து இன்ப அனுபவம் உறுவது தான் இவ்வாறு அவருடன் கலந்தும் அணைத்தும் தழுவி்யும் மகிழ்வேன் என்று பாடுகிறார்
எல்லவரும் எனக்கு வெட்கமிலை என்றே என்னை ஏசுவர் – அதனால் நான் இவ்வாறு கூறினேன் எங்கிறார் வள்ளல் பெருமான்
வெங்கடேஷ்