நம் வாழ்வும் வண்ணங்களும்
நம் வாழ்வும் வண்ணங்களும் வண்ணமது பலவுண்டு வண்ணத்திற்கொரு குணமுண்டு. விந்தைமிகு மனவியலில் விளக்கமது பலவுண்டு. ஆழமான மனவியலை ஐயமற நானறியேன். எத்தனையோ இருந்தாலும் இயம்புகிறேன் தெரிந்தவரை. சிவந்த நிறமதுவும் சீற்றமது கொண்டுவரும் ஆற்றலை தூண்டிவிடும் அனலாய் கொதிக்கவைக்கும். பச்சை நிறமதுவும் இச்சைதனை தூண்டிவிடும் இனிய உணர்வு கொண்டுவரும். மஞ்சள் நிறமதுவும் மங்களமாய் இருக்கவைக்கும் மனமதிலே மென்ணுணர்வு தரும். அடர்நீலமதுவுமே அடிமனதை அமைதிபடுத்தும் ஆழ்நிலையை உணரவைக்கும். (சிலருக்கு பற்பல மன உணர்வுகளை தூண்டும்) கருப்பு நிறமதுவும் கலக்கமது கொண்டுவரும் உள்ளத்தெளிவையது…