அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 63
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 63 ஐயமுறேல் காலையில்யாம் வருகின்றோம் இதுநம் ஆணைஎன்றார் அவராணை அருளாணை கண்டாய் வெய்யர்உளத் தேபுகுதப் போனதிருள் இரவு விடிந்ததுநல் சுடர்உதயம் மேவுகின்ற தருணம் தையல்இனி நான்தனிக்க வேண்டுவதா தலினால் சற்றேஅப் புறத்திருநீ தலைவர்வந்த உடனே உய்யஇங்கே நான்அவரைக் கலந்தவரும் நானும் ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே பொருள் : சந்தேகம் வேண்டாம் என் கணவராகிய ஆன்மா காலை வருவதாக கூறியுள்ளார் – இது அவர் ஆணை…