சாகாத்தலை-  வேகாக்கால் –  போகாப்புனல்  2

சாகாத்தலை-  வேகாக்கால் –  போகாப்புனல்  2 முதலில்  ஓளியாக்கனல் உருவாக – உருவாக்க வேண்டும் பின்னர் வேகாக்கால் உண்டாகும் இது ரெண்டும் கூடி உச்சிக்கு ஏறினால் போகாப்புனல் உருவாகும் இது தான் படி முறை ஆம் முதல் – அக்னி ரெண்டாவது – வாசி – இறை சுவாசம் மூன்றாவது – நீர் அமுதம் வெங்கடேஷ்

வாழ்வின் நிதர்ஸனம்

வாழ்வின் நிதர்ஸனம் “ ஒரு உறையில் இரு வாள் “ சாத்தியமிலை இது உண்மையாக்கியது வைரமுத்து + இளையராஜா ஜோடி இளையராஜா + பாரதிராஜா ஜோடி பாரதிராஜா + வைரமுத்து ஜோடி இவர்கள் இணைப்பு நீண்ட நாள் நீடிக்கவில்லை வெங்கடேஷ்

 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 68

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 68 ஆன்ம சாதகர்களும் – யோகிகளும் தங்கள்விந்து  சக்தி ஆவியாகி காய்ந்துவிடக்கூடாது என்பதுக்காக சிரசில் தலைப்பாகை அணிந்திருப்பர் புறத்தில் இதையே இரு /நான்கு சக்கர வாகனங்களை நிழலில் தான் வைக்கின்றார் மக்கள் வெயிலில் வைத்தால் எரிபொருள் ஆவியாகி காய்ந்து போம் இது அக சாதனம்/அனுபவத்தின் புற வெளிப்பாடு ஆம் புற உலகில் காண்பவை யாவும் அகத்தின் பிரதிபலிப்புகளே ஆம் வெங்கடேஷ்

ஞானியும் சாமானியரும் 60

ஞானியும் சாமானியரும் 60 சாமானியர் “ வா சிவா – வா சிவா “ என சிவத்தை கூவி கூவி அழைக்கின்றார் ஆன்ம சாதகரோ “ வாசி வா – வாசி வா “ என ஓர் எழுத்தை மாற்றி வைத்து சிவத்தை கூவி கூவி அழைக்கின்றார் முதலாமவர் – புறம் – சரியை – கிரியை ரெண்டாமவர் – அகம் – யோகம் – ஞானம் இருவர்க்கும் கடலளவு வித்யாசம் இருவரும் இரு துருவங்கள் வெங்கடேஷ்

சுவாமி மலை – ஊர் பெருமை சிறப்பு

சுவாமி மலை – ஊர் பெருமை சிறப்பு இது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும் இது கும்பகோணம் அருகே இருக்கும் திருத்தலம் ஆம் இங்கு இருக்கும் “முருகனுக்கு சுவாமி நாத சாமி” என பெயர் – அதாவது அப்பனுக்கே உபதேசம் செய்த சாமி என்பதால் இந்த சுவாமி நாத சாமி பேர் அதாவது ஆன்மா ஆகிய முருகன் – குரு – நம் அகத்தில் இருக்கும் வீற்றிருக்கும் குரு என உலகத்துக்கு அறிவிக்க இந்த திருவிளையாடல் –…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 64

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 64 மன்றுடையார் என்கணவர் என்உயிர்நா யகனார் வாய்மலர்ந்த மணிவார்த்தை மலைஇலக்காம் தோழி துன்றியபே ரிருள்எல்லாம் தொலைந்ததுபன் மாயைத்  துகள்ஒளிமா மாயைமதி ஒளியொடுபோ யினவால் இன்றருளாம் பெருஞ்சோதி உதயமுற்ற ததனால் இனிச்சிறிது புறத்திருநீ இறைவர்வந்த உடனே ஒன்றுடையேன் நான்அவரைக் கலந்தவரும் நானும் ஒன்றான பின்னர்உனை அழைக்கின்றேன் உவந்தே பொருள் : வெளியில் திரு நடம் செயும் ஆன்மா ஆகிய என் கணவர் திருவாய் மலர்ந்த திருவார்த்தை என்…

திரு அருட்பா – ஆறாம் திருமுறை – ஆடேடி பந்து ஆடேடி பந்து – 7

திரு அருட்பா – ஆறாம் திருமுறை – ஆடேடி பந்து ஆடேடி பந்து – 7 தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்  என்தோழி வாழிநீ என்னொடு கூடி துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச் சோதிஎன் றோதிய வீதியை விட்டே அப்பாலே போகாமல் ஆடேடி பந்து அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி பொருள் : உலகத்தவர் சாகத்துணிந்தார் தவறான எண்ணத்தால் – அவர் உள்ளம் வெட்கிபோகும்…