தெளிவு 232

தெளிவு 232 ஆடையில் அழுக்கு எவ்வளவோ அதிகமோ அந்த அளவுக்கு அதிகமாக சோப் வேண்டும் அழுக்கு களைய சோப் எவ்வளவு அதிகமோ அந்த அளவுக்கு தண்ணி வேண்டும் சோப்பை நீக்க அதே போல் இலக்கு எவ்வளவு உயரமோ அந்த அளவுக்கு உழைப்பு அர்ப்பணிப்பு வேண்டும் ரெண்டும் ஒத்துப்போனால் தான் முடிவுகள் சாதகமானதாக இருக்கும் இலையெனில் விபரீதமாக முடியும் வெங்கடேஷ்

தெளிவு 231

தெளிவு 231 அமாவாசைக்கும் அப்துல் காதர்க்கும் என்ன சம்பந்தமோ ?? அந்த சம்பந்தம் தான் மனவளக்கலைக்கும் சன்மார்க்கத்துக்கும் வேதாத்திரிக்கும் திருவடிக்கும் வேதாத்ரிக்கும் சன்மார்க்க கண்ணாடி பயிற்சிக்கும் இந்த பதிவு ஏனெனில் ?? அனேகர் என்னுடன் தொடர்பு கொண்டு தானும் கண்ணாடி தவம் செய்வதாகவும் அதை மனவளக்கலையில் கற்றுகொண்டு செய்வதாகவும் கூறுவதால் – அதுக்கும் சன்மார்க்க கண்தவத்துக்குமெந்த சம்பந்தமிலை என தெரியப்படுத்தவே  தெளிவு படுத்தவே இந்த பதிவு ஆம் இது வேறு அது வேறு ஆகும் வெங்கடேஷ்

ஆன்மீகமும் நம் சமுதாயமும்

ஆன்மீகமும் நம் சமுதாயமும் எப்படி நம் சமுதாயத்தில் / ரத்தத்தில் ஜாதி மதம் இன வெறி புரையோடி உளதோ ?? அவ்வாறே ஆன்மீக சமுதாயத்திலும் – பல புரளிகள் தவறான செய்திகள் புரையோடி இருக்கு நான் சிறு வயதில் சென்னையில் வளர்ந்த போது – என் வீடு சுற்றி இருக்கும் தெரு பேர்கள் பின் வருமாறு 1 மாணிக்கச் ” செட்டி ” தெரு 2 கந்தப்ப ஆச்சாரி தெரு 3 சுப்பா நாயுடு தெரு 4…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 81

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 81 காணாத காட்சியெலாம் காண்கின்றேன் பொதுவில் கருணைநடம் புரிகின்ற கணவரைஉட் கலந்தேன் கோணாத மேல்நிலைமேல் இன்பஅனு பவத்தில்  குறையாத வாழ்வடைந்தேன் தாழ்வனைத்தும் தவிர்ந்தேன் நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி நயக்கின்றேன் நற்றவரும் வியக்கின்ற படியே மாணாகம் பொன்ஆகம் ஆகவரம் பெற்றேன் வள்ளல்அருள் நோக்கடைந்தேன் கண்டாய்என் தோழி பொருள் : நான் காண்பரிய காட்சி எலாம் காண்கிறேன் – சிற்றம்பல வெளியில் திருனடம் பயிலும் சுத்த சிவம்…

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 71

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 71 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – பெண்கள் கூந்தல் பின்னி முடித்தல் நாம் தினமும் பார்ப்பது – பெண்கள் கூந்தலை சடை பின்னி அதை பின்னந்தலையில் உச்சியில் கட்டி வைப்பார்கள் இது ஏனெனில் ?? இது ஒரு பெரிய சாதனா தந்திரத்தை ரக்சியத்தை வெளிப்படுத்துது அதாவது ஆன்ம சாதகன் தன் சுவாசத்தை முழுதும் – உடலில் இருக்கும் சுவாசத்தை எல்லாம் இழுத்து – சுழுமுனை உச்சியில் கட்ட வேண்டும்…

தெளிவு 229

தெளிவு 229 அர்ஜீன் எனக்கு வேறு எதுவும் தெரியவிலை அந்த” கிளி கண் மட்டும் தெரிகிறது ” என்பது போலும் ஒரு ஆன்ம சாதகனும் எனக்கு உலகம் தெரியவிலை ” அந்த ஆன்மா எனும் கனி மட்டும் தெரிகிறது ” என்று கூறும் நிலைக்கு வர வேண்டும் கண் அப்படி இருக்க வேண்டும் வெங்கடேஷ்

மனிதரும் கைபேசியும்

மனிதரும் கைபேசியும் பட்டன் கைபேசி – அலைபேசி தான் பழங்கால அந்தக் கால மனிதர்கள் நம் தாத்தா பாட்டிகள் மாதிரி ஒரு வாரத்துக்கும் பேட்டரி நிற்கும் சார்ஜ் ஏற்றத் தேவையிலை அந்த அளவுக்கு இருக்கும் அந்த பொருள் ஸ்மார்ட் – பேசி – மொபைல் இந்த கால இளை ஞர்கள் மாதிரி சார்ஜ் ஒரு நாள் கூட தாங்குவதிலை போல் பொசுக் பொசுக்கென போய்க்கொண்டிருக்கிறார்கள் 35 – 45 வயதுக்குள் கரையேறிவிடுகிறார்கள் எமன் கையில் சிக்கிவிடுகிறார்கள் என்ன…