சுத்த ஞானியின் பார்வை எப்படி ??

சுத்த ஞானியின் பார்வை எப்படி ?? விகல்பமில்லாமல் விகாரமில்லாமல் இருக்கும் அதில் காமம் – மயக்கம் – துரோகம் இருக்காது ஏனெனில்  அவைகள் யாவையும் மூலாக்னியால் வறுக்கப்பட்டுவிட்டபடியால் பஞ்சேந்திரியங்கள் அதன் சத்திகள் யாவும் சுத்தம் செயப்பட்டு விட்டபடியால் ஆன்ம நிலையில் காமம் – உலக கவர்ச்சி ஈர்ப்பு எலாம் இலை அவன் பார்வை கவனம் உலக மயமாக இல்லாமல் மேல் நோக்கி ஆன்மா நோக்கியே இருக்கும் அவனது கீழ் பச்சைத் திரை எரிக்கப்பட்டுவிட்டதால் அவன் சுத்தன் உத்தனம்…

” கன்னிகாதானமும் நேத்ர தானமும் “

” கன்னிகாதானமும் நேத்ர தானமும் ” கன்னிகாதானம் – இது பிராமணர்கள் திருமணச் சடங்கு ஆம் இதில் தன் பெண்ணை தானம் ஆக ஆடவர்க்கு கொடுப்பது ஆகும் இந்த திருமணம் = ஜீவ ஆன்மா கலப்பு ஆகும் – அக நோக்கில் பெண் = ஜீவன் ஆண் = ஆன்மா அதாவது ஒரு ஜீவன் ஆன்மாவுக்கு தன்னை அர்ப்பணிப்பதாகும் இது புறம் அகத்தில் ஆன்ம சாதகன் நேத்ர தானம் செய்து இதை னடைமுறைப்படுத்துகிறான் நேத்ரத்தில் இருக்கும் ஜீவன்…

” சுத்த சன்மார்க்கம்” – விளக்கம்

” சுத்த சன்மார்க்கம்” – விளக்கம் இந்த மார்க்கம் என்றால் ஜீவகாருண்ணியம் – அன்னதானம் சோறு போடுதல் சத்விசாரம் பரோபகாரம் என்றே இருக்கின்றார் தயவு என்றே போனார் உரை நடை நம்பி மோசம் போனார் இது விந்து கொண்டும் கண்கள் – திருவடி கொண்டும் செயும் சாதனம் ஆம் இது விந்துவை ஒளியாக மாற்றும் சாதனா தந்திரம் ஆகும் இது மூலம் தன் தேகத்தை ஒளி தேகமாக மாற்றும் வழி ஆம் இது அணுக்கள் பற்றிய மார்க்கம்…

” இருமை – எருமை – ஒருமை”

” இருமை – எருமை – ஒருமை” என்றும் ” இருமை”யில் இருக்கும் மனம் எனும் ” எருமை” ” ஒருமை ” ஓங்கும் ஆன்மா – மௌனம் எனும் நிலையில் கரைந்து – காணாமல் போம் வெங்கடேஷ்

தெளிவு 243

தெளிவு 243 மனதை கொல்லணுமா ?? மனதை அடக்கணுமா ?? ஒரே வழி தான் ரொம்ப எளிது வெரி சிம்பிள் ” நிகழ் காலத்தில் வாழப் பழகவும் ” அன்னிலையில் மனமில்லை சுவாசமும் இல்லை மனம் கடந்த காலத்திலும் எதிர்காலத்திலுமே இருக்கும் நிகழ் காலத்தில் வசிக்கத்தெரியாது அதனால் முடியாது வெங்கடேஷ்