நெற்றிக் கண் திறக்கும் வழி – 6
ஆன்மாவை அடையும் படிகள்/வழிகள்
1. இரு திருவடிகளும் புருவமத்தியில் இணைதல்
2. இரு கண்மணிகளும் மேலேறி, புருவமத்தியில் திருவடிகளுடன் கலத்தல்
3 கண்மணிகள் சூக்கும நாத விந்து கலைகளை வெளிப்படுதுதல்
( நெற்றிநடுவில் நீல ஒளியாகத் தோன்றல் )
4 சூக்கும பஞ்ச பூத – இந்திரிய சக்திகள் பிரணவத்தில் கலத்தல்
5 சூக்கும நாத விந்துக்களினாலும், சூக்குமபஞ்ச இந்திரிய சக்திகளின் கூட்டுறவாலும் திருவடிகளும் மனமும் அசைவற்று நிற்றல்
6 அதனால் மூலாக்கினி உதயமாகுதல்
7 மூலாக்கினியால் மனோ நாசம் – மனம் அடங்கிப் போதல்
8 மேலும் மூலாக்கினியால் நாதம் உண்டாகுதல்
விந்து – பரவிந்துவாக மாற்றம் அடைதல் :
9. சாதனை பலத்தால் சிவக்கலை உருகுதல்
10 கண்மணிகளினால் சிவக்கலை ( விந்து ) நடு நெற்றிக்கு மேலேறுதல்
11. மூலாக்கினியால் விந்து – பரவிந்துவாக மாறுதல்
12 திருவடி இயக்கத்தால் சுவாசம் முழுதும் புருவமத்திக்கு சேர்தல்
13 அதன் முட்டலால் – சொர்க்க வாசல் திறத்தல் – பரமபத வாசல் – சுழுமுனை வாசல் திறத்தல்
14 வாசி உருவாதல்
15 நாதத்தால் பரவிந்து வாசியுடன் கலத்தல்
16 விந்து + வாசி + மூலாக்கினி சுழுமுனை நாடி – , உச்சிக்கு – பிரமப்புழைக்கு ஏறுதல்
17 விந்துவால் முழுமை அடைந்து ஷண்முக மணி – சுப்ரமணி உருவாதல்
18 இது அதீ உஷ்ணம் ஆகிய “சுத்த உஷ்ணம் ” ஆகும்
19 இதனால் – மும்மலமும் – திரைகள் – ஜவ்வு உருகி நாசம் அடைதல்
20 ஆன்ம தரிசனம் – மௌனம் – 1008 இதழ் கமலம் – நெற்றிக்கண் திறத்தல்
இதில்
4 சூக்கும பஞ்ச பூத – இந்திரிய சக்திகள் பிரணவத்தில் கலத்தல் என்பது
திருவிளையாடற் புராணத்தில் – சிவபெருமான் – வலைஞன் போல் வந்து மீன் பிடிப்பது என்ற கதையால் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது
மீன் = பஞ்ச இந்திரிய சத்திகள்
5 சூக்கும நாத விந்துக்களினாலும், சூக்குமபஞ்ச இந்திரிய சக்திகளின் கூட்டுறவாலும் திருவடிகளும் மனமும் அசைவற்று நிற்றல் என்பது
திருவிளையாடற் புராணத்தில் – தக்ஷ யாகத்தை அழித்தும், தக்ஷனை வதம் செய்தும், அவன் தலை கொய்து அதற்கு பதிலாக ஆட்டுத் தலை வைத்தான் என்ற கதையால் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது
14 வாசி உருவாதல் என்பது
திருவிளையாடற் புராணத்தில் நரியை – பரியாக மாற்றிய கதையால் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது
நரி – சூரிய கலை
பரி – சந்திர கலை இட கலை
வெங்கடேஷ்