ஓஷோ – 7
இவர் சர்ச்சைக்குரிய சாமியார் என நான் சொல்லித்தெரிய வேண்டியதிலை
இவர் கூறுவது :
நம் வாழ்வு இந்த உலகில் – ஒரு சுற்றுலா பயணாளி போன்றது – நாம் ஆடிப்பாடி இன்பமாக இருக்க வேண்டும் – நாம் இங்கே வந்திருப்பதே இன்பமாக இருக்கத்தான்
நாம் இந்த உலகை காண வந்த ஓர் விருந்தாளி – டூரிச்ட்
இது உண்மை தான்
ஆனால் இது சாமானியரான குப்பனுக்கும் சுப்பனுக்கும்
பொருந்தாது
இது யார் மனதை கடந்த நிலைக்கு வந்துள்ளாரோ அவர்க்கே இது பொருந்தும்
இது ஞானிக்கு தான் பொருந்தும்
அவன் தான் எப்போதும் இன்பமாக இருக்கிறான்
மனதின் தொல்லை இல்லை – அதனால்
மனதின் எல்லை கடந்தால் இதன் உண்மைப்பொருள் புரியும்
இதை தான் ஓஷோ கூறுகிறார் – ஆனால் மக்கள் தங்களுக்கேகென நினைத்துக்கொண்டு தவறான பாதையில் செல்கிறார் – பாலுறவு – குடி – போதை என
இவர் காட்டியதாக
இவர் கூற்று – வள்ளலார் அடைந்த உயர் நிலைக்கு ்
சன்மார்க்கத்தார் தவறுதலாக அன்னதானம் – ஜீவகாருண்ணியம் என்று எண்ணிக்கொண்டிருப்பது போலாம்
மக்கள் எப்போதும் தப்பு தப்பாகவே புரிந்து கொள்வது வழக்கம்
இது ஓஷோவுக்கும் பொருந்துகிறது
வெங்கடேஷ்