தெளிவு 243
1குரு சாக்கிரம்
2 குரு சொப்னம்
3 குரு சுழுத்தி
4 சுத்த சிவ சாக்கிரம்
5 சொப்னம்
6 சுழுத்தி
7 சுத்த சிவ துரியம்
8 சுத்த சிவ துரியாதீதம் = சுத்த சன்மார்க்கத்தின் இறுதி நிலை
இதெலாம் என்ன ??
இதெலாம் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் போது இருக்கும் நிறுத்தங்கள் போலும் – இதெல்லாம் ஒரு சாதகன் கண்ணில் ஆரம்பித்து – சிற்றம்பலத்துக்கு சேரும் முன் இருக்கும் பர அவத்தைகள் ஆகும்
இதை எல்லாம் ஒரு சாதகன் தான் கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டிய அவத்தைகள் ஆம்
இதை யாரும் இவ்வளவு விரிவாய் உரைத்தது இல்லை – வள்ளல் பெருமான் தவிர
உலகம் = துரியம் – துரி்யாதீதம் என்று இறுதி சொல்லிவிட்டது
ஆனால் வள்ளல் தான் இதையும் மீறி எல்லா அவத்தைகளையும் அனுபவித்ததை இங்கே எடுத்துரைக்கிறார் – இருப்பதால் சொல்கிறார் –
வெங்கடேஷ்