அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 86
தனிப்படும்ஓர் சுத்தசிவ சாக்கிரநல் நிலையில்
தனித்திருந்தேன் சுத்தசிவ சொப்பனத்தே சார்ந்தேன்
கனிப்படுமெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன்
கலந்துகொண்டேன் சுத்தசிவ துரியநிலை அதுவாய்ச்
செனிப்பிலதாய் எல்லாமாய் அல்லதுவாம் சுத்த
சிவதுரியா தீதத்தே சிவமயமாய் நிறைந்தேன்
இனிப்புறுசிற் சபைஇறையைப் பெற்றபரி சதனால்
இத்தனையும் பெற்றிங்கே இருக்கின்றேன் தோழி
பொருள் :
வள்ளல் பெருமான் தான் அனுபவித்த பர அவத்தைகளஒ இங்கே பட்டியல் இட்டு கூறுகிறார்
1 சுத்த சிவ சாக்கிரம்
2 சுத்த சிவ சொப்னம்
3 சுத்த சிவ சுழுத்தி
பின்
4 சுத்த சிவ துரியம் சார்ந்தேன்
5 பின்னும் தான் எல்லாமாயும் அல்லதுமாயும் – விளங்கும் ” சுத்த சிவ துரியாதீதம் ” என்னும் நிலையில் – ஒப்பற்ற அவத்தை பேதத்தில் தான் ” சிவமாய் ” நிறைந்ததாய் உரைக்கிறார்
இந்த ” சுத்த சிவ துரியாதீதம் ” தான் இறுதி நிலையாம் 17 வது – சுத்த சன்மார்க்க நிலை ஆம்
அது சிற்சபை அனுபவமாய் விளங்குவதாக – அந்த பரிசை தான் பெற்றிக்கொண்டதாக -அதனால் இன்புற்று இருப்பதாகக் கூறுகிறார்
வெங்கடேஷ்