தெளிவு 250

தெளிவு 250 எப்படி ஒரு மனைவிக்கு மற்றெல்லா உறவை விடவும்  தாய் தந்தை அக்கா தங்கை அண்ணன் தம்பி உறவை விடவும் அவள் புருஷனிடம் இருக்கும் உறவு எல்லாவிதத்திலும் உயர்ந்ததோ அது மிகச் சிறப்பானதோ ( அதாவது ஸ்பெஷல் ) அது போலத்தான் ஒரு ஆன்ம சாதகனுக்கும் இல்லை எல்லா ஆன்ம சாதகர்க்கும் ஆன்மாவுக்கும் அவனுக்கும் இருக்கும் உறவு மற்றெலா உறவை விடவும் மேல் ஆகும் குடும்பம் – உலகம் – சமூகம் உறவுகள் விடவும் அது…

தெளிவு 249

தெளிவு 249 எப்படி எல்லா சமையலுக்கும் தக்காளி வெங்காயம் இஞ்சி பூண்டு அவசியமோ ?? அப்படித்தான் எல்லா அக அனுபவத்துக்கும் ஆன்ம சாதனத்துக்கும் பஞ்ச இந்திரிய ஒளிகள் – திருவடி – கண் – அருள் எல்லாம் அவசியம் பிரணவம் அமைக்கவும் எட்டிரண்டு சேர்க்கவும் இதெல்லாம் அவசியம் ஆம் இவைகள் இல்லாமல் ஒன்றும் ஆகாது வெங்கடேஷ்

சாதகனின் கடமையும் தர்மமும் – 19

சாதகனின் கடமையும் தர்மமும் – 19 எப்படி ஒரு நோயாளி தனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்க்கு ஒத்துழைப்பு கொடுக்கிறாரோ ?? அவ்வாறே “ஒரு ஆன்ம சாதகனும் தனக்கு உதவி – அதுவும் பர உதவிகள் செயும் திருவடிக்கு அருளுக்கும் – அருளாளர்களுக்கும் நல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” அப்போது அவனுக்கு இன்னம் அதிக உதவிகள் வரும் சாதனத்தில் மேலேற வழி கிடைக்கும் காட்டப்பெறுவான் உடல் மனம் சுத்தம் அடையும் வினைகள் தீர்க்கபடும் எல்லா நன்மைகளும் விளையும் வெங்கடேஷ்

மனிதரில் இத்தனை நிறங்களா – 13

மனிதரில் இத்தனை நிறங்களா – 13 உண்மைச் சம்பவம் என் உறவுக்காரப் பெண் ஜாதகப்பைத்தியம் – சோதிடமும் கூட அவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே தட்டாமல் செய்வாள் யாரோ ஒரு ஜோதிடன் – உன் மகன் உன் அருகில் இருந்தால் குடும்பத்துக்கு ஆகாது என்று கூறிவிட்டான் அவள் அவனை +2்முடித்தவுடன் உக்ரைன் – ரஷ்யா வில் இருக்கும் நாட்டிற்கு அனுப்பி மேல் படிப்பு படிக்க வைத்தாள் அந்த பட்டம் இந்தியாவில் அங்கீகாரம் இலை ஆகையால் இங்கே…

சிரிப்பு 227

சிரிப்பு 227 உண்மைச் சம்பவம் – 1992 நான் அப்போது Standard Motors பணி செய்துகொண்டிருந்தேன் தினமும் மின்சார ரயிலில் தான் பயணம் என்னுடன் பணி புரிபவன் ஒரு நாள் என்ன செய்தான் என்றால் – களைப்பு அசதி மிகுதியால் அயர்ந்து தூங்கி விட்டான் ரயிலில் அதனால் இரு முறை கடற்கரைக்கும் தாம்பரத்துக்கும் பயணித்து விட்டான் நல்ல சிரிப்பு பின் எழுந்து பார்த்தபோது மணி 10 தாண்டிவிட்டது காலை 7.30 மணிக்கு கம்பெனியில் இருக்க வேண்டும் பின்…

வாழ்க்கைக்கல்வி – 33

வாழ்க்கைக்கல்வி – 33 நம் வாழ்வை திரும்பிப்பார்த்து – அதை கூட்டிக்கழித்து பார்த்தால் யார் ஒருவனுடைய பிறவி ” தன்னை/தன் ஆன்மா அறிய முயற்சி செய்தும் – அதுக்கு பயிற்சி சாதனைகள் செய்தும் அதில் வெற்றி கண்டிருந்தால் அவர் தம் பிறவி அர்த்தம் உடையதாம் பயன் உண்டாம் “ இதில் – இந்த பக்கமே தலைவைத்துப்படுக்கவிலையெனில் – அவர் தம் பிறவி வீணாம் உண்டுறங்கி புணர்ந்து வாழ்தல் வீணான வாழ்வாம் தன்னை அறிய முயற்சிஎடுக்கும் வாழ்வே சிறப்பாம்…

தெளிவு 248

தெளிவு 248 யோகத்தின் விளக்கம் ? சூரியனுடன் சந்திரன் சேர்ப்பது என்பர்  நாதத்துடன் விந்து கலப்பது என்பர் ஆன்மா பரமான்மாவுடன் கலப்பது என்பர் ஆனால் கேள்விப்படாதது ” விந்து ஒழியா வகை புணர்ச்சி செய்வதும் யோகம் தான் ” இது பெரிய வித்தை ஆம் இது கட்டிலில் செய்யும் யோகம் ஆம் இது யோகத்தில் போகம் போகத்தில் யோகம் ஆம் வெங்கடேஷ்

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 88

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 88 புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான் புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம் சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம்  செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப் பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன் மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே. பொருள் : வள்ளலின் புற தேகத்தில் அபெஜோதியர் கலந்த அனு்பவம் எப்படி எனில் அப்போழ்து அமுதம் புசித்து மகிழ்ந்து…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 87

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 87 அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர் அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம் இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்  எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம் மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம் மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன் தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத் திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே. பொருள் : என் கணவர் – அபெஜோதியர் தம் அழகிய பொன்னாலான தேகத்தை நான் கலந்து தழுவி நின்ற…