அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 87
அருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்
அழகியபொன் மேனியைநான் தழுவிநின்ற தருணம்
இருட்சாதித் தத்துவங்கள் எல்லாம்போ யினவால்
எங்கணும்பே ரொளிமயமாய் இருந்தனஆங் கவர்தாம்
மருட்சாதி நீக்கிஎனைப் புணர்ந்தஒரு தருணம்
மன்னுசிவா னந்தமயம் ஆகிநிறை வுற்றேன்
தெருட்சார்பில் இருந்தோங்கு சமரசசன் மார்க்கத்
திருச்சபைக்கண் உற்றேன்என் திருக்கணவ ருடனே.
பொருள் :
என் கணவர் – அபெஜோதியர் தம் அழகிய பொன்னாலான தேகத்தை நான் கலந்து தழுவி நின்ற போழ்து – என்னுள் கலந்து இருந்த இருள் தத்துவங்கள் 36 /96 போயினபடியால் – எல்லாவிடத்தும் ஒளி்மயமாய் இருந்தது
சிவானந்தமே ஓங்கி இருந்தது – அதனால் நிறைவுற்றேன்
தெளிவு பெற்று சமரச சன்மார்க்க சபையாம் சிற்றம்பலம் தான் அடைந்தேன் என் அபெஜோதியருடனே
36 தத்துவங்கள் ஒழிந்த வகை – ஒழியும் உபாயம் கூறுகிறார் வள்ளல் பெருமான்
வெங்கடேஷ்