அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 88
புறப்புணர்ச்சி என்கணவர் புரிந்ததரு ணந்தான்
புத்தமுதம் நான்உண்டு பூரித்த தருணம்
சிறப்புணர்ச்சி மயமாகி அகப்புணர்ச்சி அவர்தாம்
செய்ததரு ணச்சுகத்தைச் செப்புவதெப் படியோ
பிறப்புணர்ச்சி விடயமிலை சுத்தசிவா னந்தப்
பெரும்போகப் பெருஞ்சுகந்தான் பெருகிஎங்கும் நிறைந்தே
மறப்புணர்ச்சி இல்லாதே நான்அதுவாய் அதுஎன்
மயமாய்ச்சின் மயமாய்த்தன் மயமான நிலையே.
பொருள் :
வள்ளலின் புற தேகத்தில் அபெஜோதியர் கலந்த அனு்பவம் எப்படி எனில்
அப்போழ்து அமுதம் புசித்து மகிழ்ந்து இருந்த போன்றிருந்தது
அவர் ஆன்மாவில் அவர் கணவர் புணர்ந்த போது அவரால் அந்த இன்பத்தை சுகத்தை வாயால் உரைக்க முடியா நிலை எய்தினாராம்
இதை உலகத்தார்க்கு சொல்வதெப்படி ??
அது சுத்த சிவானந்தம் பெருகி எங்கும் வழிந்து நிறைந்தோடியது
அந்த கலப்பின்பம் எப்படி ??
நான் அதுவாய்
அது நானாய் – என் மயமாய் – அது சின்மயமாய் – மௌன நிலையே ஆம் எங்கிறார் வள்ளல்
வெங்கடேஷ்