தீராத மன அழுத்தம்:
………………………………
மன அழுத்தம் அனைத்து வகை வெற்றியாளரிடமும் சாதாரணமாக இருப்பது தான்.
அதற்கு ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை அடிக்கடி மீறும் போது தீராத மன அழுத்தநோய் ஏற்பட்டு உடல் உபாதைகளுக்கு ஆட்படுகிறார்கள்.
- நோய் எதிர்ப்புச் சக்தி பாதிப்பு அடைகிறது.
- அதனால் பலவித நோய்கள், தொற்று நோய்களுக்கு உடல் உட்படும்.
- உடலில் பலவித இராசயன மாற்றங்கள் தூண்டி விடப் படுகிறது.
- மிகவும் ஆபத்தான நிலையில் சுரக்க வேண்டிய மன அழுத்த ஹார்மோன்கள் அடிக்கடி சுரக்கும்.
- அது நமது நோய் எதிர்ப்பு ஆற்றலோடு குறுக்கீடுகள் செய்வதால் பல்வேறு வீக்கங்கள் ஏற்படுகிறது.
- இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது.
- தசை நார்களை வலுவிழக்கச் செய்கிறது.
- தொடர்ந்து சமூகத்திற்கு எதிராக நிலையில் வாழ்வது மிகவும் அதிகமான மன அழுத்தத்தை உண்டு பண்ணும்.
இதிலிருந்து வெளியே வந்தாக வேண்டும்.
மனதை இலகுவாக்கும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக யோகம் கற்க வேண்டும்.
அடிக்கடி பிரணாயாமம், தியானம் செய்ய வேண்டும்.
உடலை பாதிக்கும் செயல்களில் இருந்து விடுபட வேண்டும்.
தீயோர் உறவை வேரறுக்க வேண்டும்.
நமது செயல்களை முறைப்படுத்தி நெறிப்படுத்த வேண்டும்
வெங்கடேஷ்:
னன்றி திரு ஆறுமுகம் ரத்னசாமி SWY group