அருட்பா – ஆறாம் திருமுறை – உத்தர ஞான சிதம்பர மாலை – 1
1 அருளோங்கு கின்ற தருட்பெருஞ் சோதி யடைந்ததென்றன்
மருளோங்கு றாமல் தவிர்த்தது நல்ல வரமளித்தே
பொருளோங்கி நான்அருட் பூமியில் வாழப் புரிந்ததென்றும்
தெருளோங்க ஓங்குவ துத்தர ஞான சிதம்பரமே.
பொருள் :
உத்தர ஞான சிதம்பரம் என்பது சைவ சமயத்தில் இருக்கும் சிதம்பரம் விட ஒரு படி மேல் நிலை அனுபவம் ஆம்
இது சுத்த சிவ துரியாதீதம் என்னும் 17 வது அனுபவ நிலை குறிப்பது ஆம் – இது சுத்த சன்மார்க்கத்தின் இறுதி அனுபவ நிலை
இதன் பெருமை கூற வந்த திருப்பதிகம் அருட்பா ஆம்
அது
அருள் ஓங்கும் ஸ்தலம்
மருள் விளங்கா இடம்
அபெஜோதி விளங்கும் இடம்
பொருள் மற்றும் தெளிவு ஓங்கும் இடம் ஆம் உத்தர ஞான சிதம்பரம் ஆகும் என்று இதன் பெருமை பாடுகின்றார் வள்ளல் பெருமான்
வெங்கடேஷ்