அறிவியலும் அரசியலும்
நம் எல்லா வாழ்வின் அங்கத்திலும்
அறிவியல் நுழைந்து விட்டது
நம் ஆரோக்கியத்தை சீரழித்துவிட்டது
உட்கார்ந்த இடத்திலே
எல்லாம் செய முடிகிறது
உடல் உழைப்பு போயிற்று
நோய் அதிகமாகிவிட்டது
ஒரு ஆட்டோ ஓட்டுனர்க்கு கூட
அலைபேசி இல்லாமல்
தொழில் செய முடியாது
அந்த அளவுக்கு அதன் ஆதிக்கம்
நம் வாழ்வு எல்லாவற்றிலும்
அரசியல் எனும் சாக்கடை வந்துவிட்டது
நதி நீர் – குடி நீர் பிரச்னை
புயல் அடித்தாலும் – மழை பெய்தாலும்
அதை அரசியலாக்கி
ஆதாயம் தேடுகின்றார் சாக்கடைகள்
கல்வியிலும் இது நுழைந்து
பல உயிரை காவு வாங்குது
ரெண்டும் நம் வாழ்வை
ஒரு வழி செய்து கொண்டிருக்குது
வெங்கடேஷ்