ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 7
கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து
கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே
மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே
திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித்
திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே
வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே
மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே
பொருள் :
அபெஜோதி தன் நாவில் கரைந்து விடாமல் இனிக்கும் கற்கண்டு
அபயம் எனில் உதவிக்கு விரைந்து வந்து என் துன்பமெலாம் தவிர்க்கும் அருள் அமுதமே
அது மெய்யருளே – — உண்மையான தீபமே
சுருக்கம் நிறைந்த இந்த உடலை பொன் தேகமாக அழியாத தேகமாக ஓங்க அருளும் சித்தே சத்தே – அறிவே உண்மையே
தன் தேகம் சுத்த தேகமாக பொன் தேகமாக மாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் வைக்கின்றார் வள்ளல் பெருமான்
எனை கலந்த நடராஜரே – நான் மகிழ்ந்து தொடுக்கும் சொல்மாலை அணிந்து அருள் செய்கவே
வெங்கடேஷ்