ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 8
” கதிக்குவழி காட்டுகின்ற கண்ணே ” என் கண்ணில்
கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே”
விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே
மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே
மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே
மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே
துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே
சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே.
பொருள் :
” இதில் ” கண் தவம் – திருவடி தவம் ” பற்றியும் அதன் பெருமை வல்லமை பற்றியும் பாடுகிறார் ”
” கதி ஆகிய திருச்சிற்றம்பலத்துக்கு வழி தனக்கு கண் காட்டுகிறதாக பாடுகிறார் ”
“என் கண்ணில் இருக்கும் மணியே – அதனுள் விளங்கும் ஒளியே ”
வேறென்ன ஆதாரம் வேண்டும் சன்மார்க்கத்தீர்
இம்மாதிரி இன்னமும் அனேக பாடல்கள் உள
உலகில் உள்ள எல்லா உயிர்க்கும் உயிராய் விளங்கும் ஆதார ஒளியே
உண்மை உணர்ந்தோர் கை அடக்கமான கனியே
ஆன்ம நிலைக்கும் மேலும் விளங்கும் தனிப்பொருளே
வேதாந்த – ஆகமத்தின் அந்தத்திலும் இலங்கும் பூரணமே
அன்பர்கள் போற்ற தனிப்பெரு வெளியில் சுத்த நடம் இயற்றும் அரசே
நான் தொடுக்கும் இந்த சொல்மாலை உன் திருத்தோளில் அணிது அருள் செய்கவே
வெங்கடேஷ் ்