ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 11
நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா
ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள்
ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி
எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச்
சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச்
சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே
நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும்
நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே.
பொருள் :
அபெஜோதி அருளாட்சி விதம் அதன் நீட்சி பற்றி பாடுகிறார்
பராசத்தி முதல் ஞான சத்தி கடையாக எல்லா அண்டங்களிலும்
இதனுள் பல கோடி சத்தி சத்தர் அண்டங்களையும் – உண்மை அறிவாம் சுத்த சிவ சன்மார்க்கம் என்னும் உயர் நிலையில் அமர்ந்தே , தன் அருட்செங்கோலால் அருளாட்சி செய்து வரும் அபெஜோதி என் அரசே என்
நீண்ட சொல் மாலையும் அணிந்து அருள் செய்கவே
வெங்கடேஷ்