தெளிவு 298

தெளிவு 298 சிங்கா : ” தூராதி தூரமடி – தூரமுமிலையடி ” இதுக்கு விளக்கம் என்ன சிங்கி ?? சிங்கி : அதாவது ஸ்தூலக் கண்ணிலிருந்து நெற்றிக்கண்ணுக்கு தூரம் அதிகமிலை – அது தூரமுமிலையடி எனவும் அதை அனுபவத்தில் ஒரு சாதகன் கொண்டு வருவதுக்குள் – அவனுக்கு பல ஆண்டுகள் ஆகிவிடுது – அப்போ அது தூராதி தூரமடி எனவும் வழங்கப்படுது சித்தர் பெருமக்களால் வெங்கடேஷ்

தெளிவு 297

தெளிவு 297 திருவடி இணைப்பும் கண்மணி இணைப்பும் சுவாச பந்தனமும்  அசைவு ஒழிவும் – விழிப்புணர்வும் மனதின் கோரப் பிடியில் இருந்து நமக்கு சற்றே தளர்வு கொடுக்கும் என்னது ?? எப்போ முழுசா கிடைக்குமா ?? அனுபவத்துக்கு வந்த பொறவு சொல்றேன் வெங்கடேஷ்

சிரிப்பு 235

சிரிப்பு 235 செந்தில் : என்னண்ணே சின்ன புள்ள மாதிரி டிவி சீரியல பாத்துக்கிட்டிருக்கீங்க ?? க மணி : டேய் – இதுவும் நல்லதுக்குத்தாண்டா – எவ்ளோ நேரத்துக்குத்தான் தியானம் தவம்னு செய்றது சொல்லு ? அதான் இ்து ,மாதிரி மனசை திசை திருப்பறதுக்குத்தான் இந்த சீரியல் எல்லாம் இதுலயும் நல்லது கெட்டது இருக்குது பாரு இந்த சீரியல்ல – யாரும் யாருக்கும் உறவு இல்லை ஆனா் பாரு அம்மா அப்பா அக்கா தங்கை கணவன்…

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 12

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 12 தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்  நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார் அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும் அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே பொருள் : அபெஜோதியாகிய என் தனித்தலைவா – ஆன்மாவும் அபெஜோதியும் தனித்து நிற்கும் – கருவி கரணங்களுடன் 36 – கலவாது…

தெளிவு 296

தெளிவு 296 ஓர் நிறுவனத்தின் சாமர்த்தியம் புத்தி சாதுர்யம் திறம் தன் ” முதல் இடத்தை ” தக்க வைப்பதில் இருக்குது போலும் ஓர் ஆன்ம சாதகனின் தரம் அவன் ” விழிப்புணர்வை ” தக்க வைத்துக்கொள்வதில் இருக்கு வெங்கடேஷ்