ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 12
தன்பெருமை தான்அறியாத் தன்மையனே எனது
தனித்தலைவா என்னுயிர்க்குள் இனித்ததனிச் சுவையே
நின்பெருமை நான்அறியேன் நான்மட்டோ அறியேன்
நெடுமால்நான் முகன்முதலா மூர்த்திகளும் அறியார்
அன்புறும்ஆ கமமறைகள் அறியாவே எனினும்
அவரும்அவை களும்சிலசொல் அணிகின்றார் நினக்கே
என்பருவம் குறியாதே எனையாண்ட அரசே
யானும்அவர் போல்அணிகின் றேன்அணிந்திங் கருளே
பொருள் :
அபெஜோதியாகிய என் தனித்தலைவா – ஆன்மாவும் அபெஜோதியும் தனித்து நிற்கும் – கருவி கரணங்களுடன் 36 – கலவாது நிற்கும்
என் ஆருயிரில் இருந்து என்றென்றும் இனிக்கும் தனிச்சுவையே –
நின் பெருமையை நான் அறியேன் – நான் மட்டுமோ ??
மாலும் பிரமனும் மற்ற தேவரும் அறியாரே
அவர் மட்டோ ??
வேதாகமங்களும் அறியாவே
எனினும் அவர் சில பல சொல் புகழ் போற்றுதல் செய்கின்றார்
என்னை நான் அறியாத வயதில் எ்ன்னை ஆண்ட அரசே – மற்றவர்கள் – மறைகள் ஆகமங்கள் போல் சொல்மாலை அணிவிக்கின்றேன் – அணிந்து அருள் செய்கவே
வெங்கடேஷ்