சிரிப்பு 235
செந்தில் : என்னண்ணே சின்ன புள்ள மாதிரி டிவி சீரியல பாத்துக்கிட்டிருக்கீங்க ??
க மணி : டேய் – இதுவும் நல்லதுக்குத்தாண்டா – எவ்ளோ நேரத்துக்குத்தான் தியானம் தவம்னு செய்றது சொல்லு ?
அதான் இ்து ,மாதிரி மனசை திசை திருப்பறதுக்குத்தான் இந்த சீரியல் எல்லாம்
இதுலயும் நல்லது கெட்டது இருக்குது பாரு
இந்த சீரியல்ல – யாரும் யாருக்கும் உறவு இல்லை
ஆனா் பாரு
அம்மா அப்பா
அக்கா தங்கை
கணவன் மனைவி
நண்பன் நண்பி நு எப்படி நடிக்கிறாங்க ??
யாரோ எங்கிருந்தோ வர்றாங்க – ஒண்ணா சேர்றாங்க – நடிக்கிறாங்க – ,பிரிஞ்சி போயிடறாங்க
அவுங்களுக்கு தெரியும் இ்து உண்மையிலை – வெறும் நாடகம் தான்னு – அதான் சந்தோஷமா நடிக்கிறாங்க
இது மாதிரி தாண்டா நம்ம வாழ்க்கையும்
இதுவும் ஒரு நாடகம்னு புரிஞ்சிக்கிட்டா – நாமளும் சந்தோஷமா இருக்கலாம்
சில காலம் சேர்ந்திருக்கோம் – செத்துட்டா பிரி ஞ்சிப்போய்டுவோம்
இப்படி நினைச்சா – ” எல்லாம் சுகமே ”
இது கொஞ்சம் சிரமம் கஷ்டம் தான்
அதான் உலகத்துல பெரிய நாடக கதாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் – ” நாடகமே உலகம் ” நு சொல்லியிருக்கார் –
” கவிஞர்கள் பாதி ஞானிகள்னு ” நிரூபிச்சுட்டார் பாத்தியா
செந்தில் : இது சிரிப்பு மட்டுமில்லே – சிந்திக்க வேண்டியது அண்ணே
வெங்கடேஷ்