தெளிவு 302

தெளிவு 302 நாக்குக்கு எது பிடிக்கவிலையோ ?? அது தான் உடலுக்கு நல்லது மனதுக்கு எது பிடிக்கவிலையோ அது ஆன்மாவுக்கு நல்லது வெங்கடேஷ்

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 13

ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 13 உண்ணஉண்ணத் தெவிட்டாதே தித்தித்தென் உடம்போ டுயிர்உணர்வும் கலந்துகலந் துள்ளகத்தும் புறத்தும் தண்ணியவண் ணம்பரவப் பொங்கிநிறைந் தாங்கே  ததும்பிஎன்றன் மயம்எல்லாம் தன்மயமே ஆக்கி எண்ணியஎன் எண்ணமெலாம் எய்தஒளி வழங்கி இலங்குகின்ற பேரருளாம் இன்னமுதத் திரளே புண்ணியமே என்பெரிய பொருளேஎன் அரசே புன்மொழிஎன் றிகழாதே புனைந்துமகிழ்ந் தருளே பொருள் : உண்ண உண்ணத் திகட்டாமல் இனித்தும் என் உடல் உயிர் கலந்தும் அதில் அகத்தும் புறத்தும் கலந்து – பொங்கி…

தெளிவு 301

தெளிவு 301 உடலாகிய நிறுவனத்தை மனம் என்னும் எஜமான் நடத்திக்கொண்டிருக்கும் வரையில்  நட்டத்தில் தான் ஓடும் முடிவில் இழுத்து மூட வேண்டியது தான் – மரணம் எப்போது அந்த ஆட்சி்ப்பொறுப்பு ஆன்மா கையில் வருதோ ?? அப்போது தான் லாபத்தில் இயங்கும் இது உண்மை சத்யம் உறுதி உயிர் திருச்சிற்றம்பலம் சேரும் வெங்கடேஷ்

தேங்காய் – சன்மார்க்க விளக்கம்

தேங்காய் – சன்மார்க்க விளக்கம் இதை நாம் பூஜையில் இறைக்கு ஏன் படைக்கின்றோம் ?? இதில் பெரிய தத்துவ விளக்கம் அடங்கி இருக்கு தேங்காயில் 3 கண் – இனிப்பு நீர் – மட்டை ஓடு நார் என எல்லாம் இருக்கு வெள்ளை பருப்பு = இறை இதன் விளக்கம் மட்டை – ஓடு – நார் = மும்மலங்கள் 3 கண் – சோமசூரியாக்னிக் கலைகள் இனிப்பு நீர் = அமுதம் அதாவது நம் சாதனா…

தெளிவு 300

தெளிவு 300 மன வளக்கலை மன்றம் சென்று மௌன விரதம் அனுஷ்டிப்பது எப்படி சடங்கோ ?? அவ்வாறே தான் ” ஒருவர் தன்னை யாம் – எமது – நாம் என உரைப்பதும் ” சடங்காம் இது சத்தினிபாதம், வாய்க்காமல் ” நான் எனும் ஆணவ மலம் ” நிவர்த்தி ஆகிவிட்டது எனக்கூறுவது நகைச்சுவை வேடிக்கை வெங்கடேஷ்

தெளிவு 299

தெளிவு 299 விந்து பர விந்துவை மறுக்க வந்தது ” சுத்த விந்து ” சிவம் பரசிவம் ரெண்டையும் மறுக்க வந்தது ” சுத்த சிவம் ” இதில் இருந்து ” சுத்த சிவ சன்மார்க்கம் ” வந்தது என கொள்ளலாம் அதாவது சுத்த சன்மார்க்கம் + சுத்த சிவம் சேர்ந்தது அது வெங்கடேஷ்