ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 14
நாட்டார்கள் சூழ்ந்துமதித் திடமணிமே டையிலே
நடுஇருக்க என்றனையே நாட்டியபே ரிறைவா
பாட்டாளர் பாடுதொறும் பரிசளிக்கும் துரையே
பன்னுமறைப் பாட்டேமெய்ப் பாட்டினது பயனே
கூட்டாளா சிவகாமக் கொடிக்கிசைந்த கொழுநா
கோவேஎன் கணவாஎன் குரவாஎன் குணவா
நீட்டாளர் புகழ்ந்தேத்த மணிமன்றில் நடிக்கும்
நீதிநடத் தரசேஎன் நெடுமொழிகொண் டருளே
பொருள் :
சுழுமுனை நாடு அடைந்த நாட்டார்கள் மதித்திட கௌதம மணி – சுப்ரமணி மேடை மேல் என்னை நாட்டிய பெரிய தெய்வமே
வேதகீதங்களே பாட்டாகும் – அந்த பாட்டின் பயனே
சிவகாம வல்லி எனும் கொடிக்கு ஒத்துப்போகும் பிடியே
என் அரசே – என் மணாளா – என் குருவே – என் குணமே
மணி ஆகிய பொதுவில் வெளியில் நடம் பயிலும் அரசே – என் நீண்ட சொல் மாலை அணிந்து அருள் செய்கவே
வெங்கடேஷ்