ஆறாம் திருமுறை – அருள்விளக்க மாலை – 22
எட்டிரண்டும் என்என்றால் மயங்கியஎன் றனக்கே
எட்டாத நிலைஎல்லாம் எட்டுவித்த குருவே
சுட்டிரண்டுங் காட்டாதே துரியநிலை நடுவே
சுகமயமாய் விளங்குகின்ற சுத்தபரம் பொருளே
மட்டிதுஎன் றறிவதற்கு மாட்டாதே மறைகள்
மவுனம்உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
தட்டறியாத் திருப்பொதுவில் தனிநடஞ்செய் அரசே
தாழ்மொழிஎன் றிகழாதே தரித்துமகிழ்ந் தருளே
பொருள் :
8/2 தெரியாத என்னை – எட்டாத மேல் நிலையெல்லாம் எய்தச் செய்த குருவே
துரியம் என்னும் மேல் நிலையில் விளங்கும் சுத்த பரம் பொருளாகிய ஆன்மாவே
வேதங்கள் விளக்கம் கொடுக்கறியா னிலையில் மவுனம் காக்க – அன்னிலையில் விளங்கும் ஒளியே
பரம் பர வெளியில் இலங்கும் ஒளியே
சிற்றம்பல வெளியில் திரு நடம் செயும் அரசே – என் புகழ் மாலையை கீழானது என்றிகழாமல் அதை அணிந்து மகிழ்ந்து அருள் செய்கவே
வெங்கடேஷ் ்,