” திருமேனி – சன்மார்க்க விளக்கம் ”
நம் பௌதீக மேனி தேகம் உடல்
அசுத்த ப ஞ்ச பூத கலப்பால் அசுத்தமாக தான் இருக்கும்
பசி – தாகம் – காமம் – நித்ரை – வியர்வை
எல்லாம் இருக்கும்
அதனால் இது அனித்யம் – நாறும் தன்மை உடைத்து
இருக்கும் போதும் மரணித்த பின்னும்
ஆனால்
இதே பௌதீக மேனி தேகம் உடல்
ஆன்மாவாகிய ” திரு ” நோக்கம் பெற்றிவிட்டால்
அதன் ” ஒளி இதன் மீது படர்ந்துவிட்டால்
அது திருமேனி ” ஆகிவிடும்
அப்போது இதன் தன்மைகள் மாறிவிடும்
பசி – தாகம் – காமம் – நித்ரை – வியர்வை
எல்லாம் காணாமல் போம்
வெங்கடேஷ்