” சாதனையின் வல்லமை “
” சாதனையின் வல்லமை ” எப்படி நம் வாழ்வின் துன்ப நேரங்களில் நம் சேமிப்பாம் செல்வம் நகை உதவுதோ அவ்வாறே தான் நம் சாதனையின் பலம் நம்மை கீழ் நோக்காதவாறு பார்த்துக்கொள்ளும் அது நம்மை தாங்கிக்கொள்ளும் இது சாதனையின் வல்லமை ஆம் வெங்கடேஷ்
” சாதனையின் வல்லமை ” எப்படி நம் வாழ்வின் துன்ப நேரங்களில் நம் சேமிப்பாம் செல்வம் நகை உதவுதோ அவ்வாறே தான் நம் சாதனையின் பலம் நம்மை கீழ் நோக்காதவாறு பார்த்துக்கொள்ளும் அது நம்மை தாங்கிக்கொள்ளும் இது சாதனையின் வல்லமை ஆம் வெங்கடேஷ்
தெளிவு 353 எதன் கண் நம் கண் செல்லவிலையோ அதன் கண் நமக்கு ஆசையிலை என பொருள் அது நம் மனதில் இலை என பொருள் இது இந்திரிய ஒழுக்கம் ஆம் வெங்கடேஷ்
உலகம் எப்படி ?? ஒரு நல்ல நிறுவனம் யார்க்கு பணியில் பதவி உயர்வு அளிக்குது ?? யார் தன் சுகம் – தூக்கம் – உணவு – வசதி தன் குடும்ப சுகம் எல்லாம் பின் தள்ளி நிறுவனத்தை முன்னிலைப்படுத்துகிறாரோ அதன் முன்னேற்றம் – வளர்ச்சியை முன்னிலைப்படுத்துகிறாரோ அவரையே மேன்மேலும் உயர்த்தி உயர்த்தி வைக்குது அவர்க்கு ஆண்டுதோறும் உயர்வு அளிக்குது இது உலக நிதர்சனம் அதே போல் தான் ஆன்மாவும் அபெஜோதியும் யார் இந்த உலகத்தை –…
தெளிவு 351 எப்படி கத்தி கொண்டு வெங்காயத்தை உரிக்க உரிக்க முடிவில் ஒன்றுமிலாததாக போகிறதோ ?? அப்படியே தான் கண் பார்வையால் மனதை உரிக்க உரிக்க எல்லா தத்துவமும் கழன்று போம் முடிவில் மனம் ஒன்றுமிலா போம் இது மனதின் நிர்வாணம் இதைத் தான் குறிக்குது பாகுபலி சிலை வெங்கடேஷ்
அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 33 தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம் திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப் பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில் பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே. பொருள் : தன் சிறு வயது சம்பவம் நினைவு கூர்கின்றார் ஓர் இரவில் இவர் உணவு…
இதுவும் அதுவும் ஒன்று தான் – 9 ” பாற்கடல் ” என்பதுவும் ” ரங்கசமுத்திரம் ” என்பதுவும் ஒன்று தான் ரெண்டும் ஆன்மா ஆகிய ரங்கன் சிதாகாயப்பெருவெளி ஆகிய கடலில் சயனித்து இருக்கிறான் என பொருள் ஆம் வெங்கடேஷ்
திருமூலர் – திருமந்திரம் ் வண்ணான் ஒலிக்கும் சதுரப் பலகை மேல் கண்ணாறுமோழை படாமற்கரை கட்டி விண்ணாற்றைத் தேக்கி குளத்தை நிரப்பிட்டு அண்ணாந்து பார்க்க அழக் கற்றவாறே பொருள் : சதுரப் பலகை = பிரணவப் பலகை – சுழுமுனை உச்சியில் எல்லா ஒளிகளையும் – நவரத்ன ஒளிகளையும் கண்ணால் பார்த்து ஒன்றாக்கி அந்த குளத்தை நிரப்பினால் – மும்மலம் எரிந்து தீர்ந்து ஆன்மா பிரகாசிக்கும் என்றவாறு இந்த மந்திரம் ஆன்ம தரிசனத்துக்கு வழி கூறுகிறது வெங்கடேஷ்
வாழ்வின் நிதர்சனம் சவால் விடும் நேரங்களில் உறங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தை தட்டி எழுப்புகிறார் இரவில் உறங்கிக்கொண்டிருக்கும் மிருகத்தைத் தட்டி எழுப்புகிறார் ஆனால் எப்பொழுதும் விழிக்கத் தயாராய் இருக்கும் ஆன்மாவை தட்டி எழுப்ப யாரும் தயாரிலை யார்க்கும் விருப்பமிலை வழியும் தெரியவிலை வெங்கடேஷ்
ஞானிகள் உலகமயம் 11 ஜக்கி : ” வெற்றாக போகவும் ஒன்றுமிலாதவராக போகவும் ” வள்ளல் பெருமானும் : இந்த கருத்தை வலியுறுத்தி ” ஒரு நீல நிற வெற்றுப் புத்தகத்தை எழுதா மறை என பெயரிட்டு சத்ய ஞான சபையில் வைத்தார் ” ஞானிகள் உலகமயம் – வேறுபாடு ் இலை – இருக்காது வெங்கடேஷ்
நினைப்பும் நேரமும் ” சாதனத்தில் மேலேற மேலேற நாம் உணர்வது ” சிலதை நினைப்பதுக்கு கூட அது தகுதி பெற்றிருக்க வேணும் ” நம் பொக்கிஷம் நேரம் இதை தகுதியில்லார்க்கு கொடுத்து விடக்கூடாது இதை அளந்து கொடுப்போம் நல்ல நிலைக்கு வந்துவிட்டால் ரெண்டிலும் கவனம் வந்துவிடும் எல்லாம் தகுதியில் உளது வெங்கடேஷ்