” ஞானியரும் சாமானியரும் “

” ஞானியரும் சாமானியரும் ” சாமானியர் தம் மனம் வார நாட்களில் சாலையில் இருக்கும் வாகன போக்குவரத்து மாதிரி  அதிகம் இரைச்சல் -சத்தம் அதிக வாகனமாக இருக்கும் ஞானியர் தம் மனமோ எப்படி பண்டிகை நாளில் சாலைகள் வெறிச் என காலியாக ஆள் அரவம் அற்று இருக்குமோ அவ்வாறு நிசப்தமாக அமைதியாக இருக்கும் ரெண்டு பேரும் எதிரும் புதிரும் தானே ?? வெங்கடேஷ்

தெளிவு 363

தெளிவு 363 எப்படி தேத்தாங்கொட்டை படிகாரம் நீரில் கலந்தால் அது தெளிவடைந்து சுத்தம் ஆகுதோ ?? அவ்வாறே தான் கண்ணும் – பார்வையும் மனதுடன் சம்பந்தப்படும் போது மனம் தெளிவடைந்து சுத்தம் ஆகிவிடும் வெங்கடேஷ்

” நடிகனும் அரசியல்வாதியும்”

” நடிகனும் அரசியல்வாதியும்” முதலாமவன் தன் ரசிகன் முட்டாளாக இருக்கும் வரையில் இவன் காட்டில் மழை ரெண்டாமவனுக்கோ தன் அடிமட்டத் தொண்டன் விழித்துக்கொள்ளாத வரையிலும் விவரம் தெரியாத வரையிலும் அவன் காட்டிலும் மழை தான் ரெண்டு பேர் வாழ்வும் அவர் கையில் இல்லை வெங்கடேஷ்

சிரிப்பு 252

சிரிப்பு 252 க மணி : டேய் உனக்கு ஆக்டோபச் மாதிரி 8 கை வந்தா என்னடா பண்ணுவே ?? செந்தில் : ரொம்ப நல்லதாப்போச்சு – வேலை சுலபமா முடிச்சுடுவேன் – ஒரே சமயத்தில எட்டு 8 பேர் கிட்ட பிக்பாக்கெட் அடிச்சிடுவேன் அண்ணே வெங்கடேஷ்

” மன அழுத்தத்துக்கு ஒரு தீர்வு – Forest Treatment “

” மன அழுத்தத்துக்கு ஒரு தீர்வு – Forest Treatment ” உண்மை நிகழ்வு – 2018 இதை ஜப்பான் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டிபிடித்திருப்பது நாம் என்ன செய வேண்டும் எனில் ?? ஓர் அடர்ந்த காட்டுக்கு சென்று ஒரு வாரம் தங்கி வர வேண்டும் அவ்வளவே இந்த சூழ் நிலை – அதாவது மரம் செடி கொடி பச்சை சூழ்னிலை – இயற்கை சார்ந்த நிலை நம் மனதை அமைதிப்படுத்தும் மன அழுத்தத்துக்கு காரணமான அணுக்களை…

சிரிப்பு 255

சிரிப்பு 255 ” சன்மார்க்கப் பொன்மொழிகள் ” அண்ணன் இடி தாங்கியின்  பொன்மொழிகள் : ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் 1 இப்போது சாதனம் எனும் ரிஸ்க் எடுக்கவிலையெனில் பின்னர் மரணம் எனும் ரஸ்க் சாப்பிட வேண்டியிருக்கும் 2 இறை திருவடிகள் மட்டும் கொடுக்கும் காப்பு மற்றெலாம் கொடுக்கும் மரணம் எனும் ஆப்பு வெங்கடேஷ்

” நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் “

” நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் ” உண்மைச்சம்பவம் – மைசூர் 1994 என்னுடன் பணிபுரிபவன் – சதா பணம் பணம் என கூறியபடியே இருப்பான் கன்னடம் பொறியாளர் – பட்டப்படிப்பு ஆனால் நடுத்தர குடும்பம் சொந்தத்தொழில் செய்து முன்னேறவிலை முடியவிலை பெண் பார்த்தார்கள் – அதிர்ஷ்டம் மிக பெரிய அந்தஸ்தில் பெண் அமைந்தது பெண் இசைக்கல்லூரி மாணவி பெங்களூர் மாமனார் பெரிய தொழில் அதிபர் – ஒரே மகள் கோடீஸ்வரர் வீட்டு சம்பந்தம்…

இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலை 6

இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலை 6 ** நான் தினமும் மீன் மட்டும் கொடுப்பதிலை மீன் பிடி தொழிலையும் கற்றுத்தருகிறேன் அவர் சொந்தக்காலில் நிற்க கற்றுத்தருகிறேன் ** நான் தினமும் உணவு மட்டும் வழங்குவதிலை அது இல்லாமல் வாழும் கலை கற்றுத்தருகிறேன் சூரிய யோகம் – ஆன்ம யோகம் பயிற்றுவிக்கிறேன் வெங்கடேஷ்

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 40

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 40 மூர்த்திகளும் நெடுங்காலம் முயன்றாலும் அறிய முடியாத முடிவெல்லாம் முன்னியஓர் தினத்தே ஆர்த்தியுடன் அறியஎனக் களித்தருளி அடியேன்  அகத்தினைத்தன் இடமாக்கி அமர்ந்தஅருட் குருவே பார்த்திபரும் விண்ணவரும் பணிந்துமகிழ்ந் தேத்தப் பரநாத நாட்டரசு பாலித்த பதியே ஏர்த்திகழும் திருப்பொதுவில் இன்பநடத் தரசே என்னுடைய சொன்மாலை இலங்கஅணிந் தருளே. பொருள் : 5 தொழில்் செய் தலைவர்களும் பன்னெடுங்காலம் தவம் செய்தும் காணா முடிவும் இறுதியும்…