வாழ்வின் நிதர்சனம்

வாழ்வின் நிதர்சனம் ” பிரியாணி இருக்க தக்காளி சாதத்துக்கு மதிப்பு இலை போலும் ” உலக வாழ்வில் சுகம் போகம் ஆட்டம் ஆரவாரம் ஆர்ப்பாட்டம் இருக்க அமைதி நிம்மதி ஆனந்தம் ஆரோக்யம் தரும் தவம் தியானத்துக்கு மதிப்பு இலை இது உலக நிதர்சனம் வெங்கடேஷ்

” அருளும் அரசும் “

” அருளும் அரசும் ” இந்திய தண்டனை சட்டம் : குற்றம் செய்பவர் விட அதைச் செயத்தூண்டியவர்க்கு தான் தண்டனை அதிகம் மூளையாகச்செயல் படுதல் தாம் பெரிய குற்றம் அருளாட்சி : புண்ணியம் செய்பவர் விட அதைச் செயத்தூண்டியவர்க்கு தான் புண்ணியம் அதிகம் வெங்கடேஷ்

வாழ்க்கைக் கல்வி

வாழ்க்கைக் கல்வி 1 இதய ” வால்வு ” முடங்கினால் நம் ” வாழ்வும்” முடங்கிடும் இது ” வால்வு – வாழ்வு ” பற்றியது 2 ” உயிர் ” போகும் முன் ” உயில் ” எழுதி விடுக சொத்து இருப்பின் இது ” உயிர் – உயில் ” பற்றியது வெங்கடேஷ்

இயற்கை எப்படி வேலை செயுது ??

இயற்கை எப்படி வேலை செயுது ?? நாம் என்ன நினைக்கிறோமோ ?? என்ன செய்கிறோமோ ?? அதையே நமக்கு திருப்பி அளிக்குது கடல் அலை நாம் மாலை தூக்கி வீசி எறிந்தால் அதையே நமக்கு நமக்கு திருப்பி அளிக்குது அதே செருப்பை வீசி எறிந்தாலும் அதையே நமக்கு திருப்பி அளிக்குது எல்லாம் நம் எண்ணத்திலும் செயலிலும் உள்ளது பின் இறையை நொந்து கொள்வதில் என் பயன் ?? இது மூன்றாம் விதி வெங்கடேஷ்

வாழ்வின் நிதர்சனம்

வாழ்வின் நிதர்சனம் இன்பம் வரும் முன்பே அது வரப்போகுது என்ற காத்திருப்பு மிக்க இன்பம் தரும்  திருமணத்துக்கு காத்திருக்கும் மணமக்கள் கூறுவர் அதே போல் துன்பம் துயரம் வரும் முன்பே அது வந்துவிட்டுமோ என்ற பயம் போல் துன்பமிலை வெங்கடேஷ்