மன அழுத்தம் தீர வழி
உண்மைச்சம்பவம் – கோவை
அப்போது நான் பிரிக்காலில் பணி செய்து கொண்டிருந்தேன்
நாங்கள் மதிய இடைவேளையில் ரிசப்ஷனில் தமிழ் நாளிதழ் படிப்போம்
என்னுடன் பணி புரியும் ஒருவன் மட்டும் வித்யாசமாக பேப்பர் படிப்பான்
அவன் எப்படி படிப்பான் என்றால் ??
முதல் வரி இடதிலிருந்து வலது வரை படித்துக்கொண்டே போவான் – மூன்று வெவ்வேறு செய்திகள் இருக்கும் – ஆனால் இதை எல்லாம் பார்க்காமல் படித்துக்கொண்டே போவான்
அது சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருக்கும்
ஆனால் கேட்டால் சிரிப்பு வரும்
நான் வாய்விட்டு சிரிப்பேன்
இதை எதேச்சையாக டாக்டரிடம் சொல்லி சந்தேகம் கேட்டேன் – இது மன அழுத்தத்துக்கு மிக நல்லது – இது உளறலுக்கு சமமானது என்றார்
இது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது
Serendipity
எல்லாரும் இதை சோதனை செய்து பார்க்கவும் – விருப்பம் இருப்பின்
வெங்கடேஷ்