” ஆன்ம சாந்தியும் – சாந்தி முகூர்த்தமும் ”
இதை ஏன் பதிவிடுகிறேன் என்றால் ஒரு சன்மார்க்க அன்பரின் சாந்தி விழாவில் கலந்து கொண்ட போது வந்த சந்தேகம்
அங்கு ஆன்மா உடல் விட்டு நீங்கியவுடன் அது சாந்தி அடையுது என்றார்
இந்த கீழ் கண்ட விளக்கம் சொன்னால் எடுபடாது என்பதால் சொல்லவிலை
அந்த கூட்டம் இதை இந்த சேதியை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இல்லை – மனப்பக்குவமிலை
அதனால் இந்த பதிவு
” சாந்தி முகூர்த்தமும் ” = இது ஆண் பெண் உ்டல் சம்பந்தப்பட்டது – இதையே நாள் நட்சத்திரம் பார்த்து தான் இந்த சடங்குக்கு ஏற்பாடு செய்வர் நம் மக்கள்
” இதில் ஆண் பெண் உணர்ச்சிகள் சாந்தி ஆகி அது சம நிலைக்கு வருகிறது ”
இதில் பாதி போய் நிறை அனுபவம் உண்டாகுது – உடல் ரீதியாக
” ஆன்மா சாந்தி ” = இது ஆன்மாவின் ஆணவ மலமும் கழிந்து அது சிவத்துடன் ரெண்டறக்கலந்து – அதன் பின் சாந்தி – நிறைவு அடைவது தான் ஆன்ம சாந்தி
ஆன்மா அறிவில் முழுமை நிறை பெறுதல் ஆன்ம சாந்தி
இது நடைபெறா வரையில் அது பிறப்பிறப்பு சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கும்
இது தான் ரெண்டுக்கும் உள்ள வித்யாசம்
வெங்கடேஷ்