அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 3
அருட்பா – ஆறாம் திருமுறை – பொன் வடிவப்பேறு – 3 இடர்தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த சுடர்கலந்த ஞான்றே சுகமும் – முடுகிஉற்ற தின்னே களித்திடுதும் என்நெஞ்சே அம்பலவன் பொன்னேர் பதத்தைப் புகழ். பொருள் : என் துன்பம் – வருத்தம் தொலைந்ததால் – ஆன்ம ஒளி என் உடலில் கலந்ததால் அடுக்கிய சுகமும் – அதன் களிப்பும் – அதனால் என் நெஞ்சே அம்பலவன் பொன்னடியைப் புகழ்வாய் வெங்கடேஷ்